ஏற்றத்தில் நிஃப்டி: முழுமையான அலசல்!

Nifty on the rise
Nifty on the rise

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி வரலாறு காணாத முன்னேற்றத்தை சந்தித்து இருக்கிறது. இவ்வாறு இன்று நிஃப்டியின் மதிப்பு 20, 062.90 என்று வர்த்தகம் ஆகிறது.

இந்திய பங்குச்சந்தை இரண்டு வகையில் கணக்கிடப்படுகின்றன ஒன்று நிஃப்டி. இது தேசிய பங்குச் சந்தை குறியீடு. மற்றொன்று சென்செக்ஸ் இது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ஆகும்.

தேசிய பங்குச் சந்தையான் நிஃப்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பங்குகள் பட்டியல் இடப் படுகின்றன சென்செக்ஸ் 4500 க்கும் மேற்பட்ட பங்குகள் பட்டியலிடப்படுகின்றன.

அதே சமயம் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 என்று அழைக்கப்படுவதற்கு காரணம் தேசிய பங்குச் சந்தை பட்டியலிடப்படும் பங்குகளில் முதல் 50 இடங்களை பெற்ற பங்குகளைக் கொண்டு நிஃப்டி தீர்மானிக்கப்படுகிறது. அதில் முதல் 10 இடங்களை பெற்ற பங்குகளைக் கொண்டு நிஃப்டியினுடைய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 3 நாள் தொடர் விடுமுறைக்கு நவம்பர் 28ம் தேதியான நேற்று தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. அதாவது நிஃப்டி 19,900 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் 204.16 புள்ளிகள் உயர்ந்து 66,174.20 ஆகவும், நிஃப்டி 95 புள்ளிகள் உயர்ந்து 19,889.70 ஆகவும் இருந்தது. இவ்வாறு 1872 பங்குகளின் விலை அதிகரித்தும், 1750 பங்குகளின் விலை சரிந்தும் வர்த்தகமாகின. மேலும் 159 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லாமலும் வர்த்தகமாகின.

நிஃப்டியில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல் மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பங்குகள் பெரும் லாபம் ஈட்டின.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 29 இன்று நிஃப்டியின் மதிப்பு 20,062.90 என்று விற்பனையாகிறது. மேலும் இன்று ஆதிக்கம் செலுத்தும் பங்குகள். மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் தலா 3 சதவிகிதம் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. அதே நேரத்தில் மெட்டல், ஆட்டோ மற்றும் பொதுத்துறை வங்கி குறியீடுகள் தலா 1 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கேப்பிட்டல் கூட்ஸ், பார்மா துறை ஆகியவை விற்பனை கடினமாக இருக்கின்றன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து, ஸ்மால்கேப் குறியீடு சரிவுடன் முடிவடைந்தது.

இதையும் படியுங்கள்:
யானைக்கு வரமளித்த கஜேந்திர வரதர்!
Nifty on the rise

ஏகேஜி எக்சிம் - இந்த பங்கு பெரிதாக்கப்பட்டு 10 சதவீதம் மேல் சர்க்யூட்டில் லாக் ஆனதால் கவுன்டரில் அதிக கொள்முதல் காணப்படுகிறது. அட்லாண்டா - பங்கு குறிப்பிடத்தக்க வாங்குதல் நடவடிக்கையை கொண்டுள்ளது. கவ்வேரி டெலிகாம் ப்ராடெக்ட்ஸ் பங்குகள் இன்று கவுன்டரில் உறுதியான விலை அளவில் காணப்படுகின்றது. மேலும் நேற்றைப் போல அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல் மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வை நோக்கி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com