20 ஆயிரம் புள்ளிகளை தொட்ட இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

NIFTY50
NIFTY50

ந்திய பங்குச்சந்தையான நிப்ட்டி50 நீண்ட நாட்களுக்கு பிறகு 20 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 28 அன்று முதல் 19,000 ஐத்தாண்டிய பிறகு ஜூலை மாதத்திலேயே குறியீட்டு எண் 20,000 ஐ தாண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 8 புள்ளிகள் குறைந்து, 19,992 என்ற சாதனையை எட்டியது. அந்த நிலைகளில் இருந்து தற்போது மீண்டு நிஃப்டி 50 குறியீடு இன்றைய வர்த்தக அமர்வில் 20,000 புள்ளிகளைத் தாண்டி சாதனைப்படைத்துள்ளது.

இன்று காலை தொடங்கிய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 323.17 புள்ளிகள் உயர்ந்து 66,922 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 112.45 புள்ளிகள் அதிகரித்து 19,932 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வந்த நிலையில், மதியத்திற்கு பிறகு 20 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனைப்படைத்துள்ளது.

அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகளில் நிலவும் பொருளாதார அழுத்தங்களால் இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) நிகர ரூ.224.22 கோடி மதிப்புள்ள பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (டிஐஐ) நிகர ரூ.1,150.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். இதன்காரணமாக இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை முதலே ஏற்றம்காணத் தொடங்கியது.

இதனையடுத்து NTPC Limited, formerly known as National Thermal Power Corporation, Coal india, CIPLA,LARSEN, TATA STEEL, ONGC ஆகிய பங்குகளின் உயர்ந்து நிப்ட்டி 50 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி உதவியாக இருந்துள்ளது. அதேபோல், ஹெச்சிஎல், டெக் மாருதி, பாரத ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, நெஸ்லே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் & டூப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களின் பங்குகள் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. அதேபோல்,பார்தி ஏர்டெல், இண்டஸ்ட் இண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com