
இந்தியாவில் நவம்பர் 20 ஆம் தேதி தங்கப்பத்திரம் வெளியிடப்பட உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி தங்கப் பத்திரத்தின் விலையை நிர்ணயித்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய காரணியாக திகழ்வது தங்கம். அதிலும் குறிப்பாக இந்திய மக்கள் தங்கத்தை மிகவும் அதிகம் விரும்புகின்றனர். இதனால் தங்கத்தை பெருமளவில் வாங்கி சேர்க்க முனைப்பு காட்டுகின்றனர். மேலும் உலகில் அதிகம் தங்கம் விற்பனையாகும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அதே நேரம் தங்கத்தை வாங்கி வைத்திருப்பதன் மூலம் செய்கூலி, சேதாரம் போன்ற இழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டும், முதலீட்டாளர்கள் தங்கத்தை எவ்வித இழப்பும் இல்லாமல் பயன்படுத்த எதுவாகவும் இந்திய அரசு தங்கப் பத்திரத்தை அறிமுகம் செய்தது. ஒரு தங்க பத்திரம் ஒரு கிராம் தங்கத்திற்கு ஈடாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து இந்திய மக்கள் அதிக தங்கப் பத்திரத்தை வாங்கி சேமிக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான தங்க பத்திரம் நவம்பர் 20ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் நடைபாண்டிற்கான பத்திரத்தின் விலை நவம்பர் 15,16,17 ஆகிய தேதிகளில் தங்கம் விற்பனையான விலையில் இருந்து சராசரி அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஒரு யூனிட் தங்க பத்திரத்தின் விலை 6,076 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரொக்கத்தை செலுத்தி பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய மக்கள் அதிக அளவில் தங்க பத்திரங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வருடம் தங்க பத்திரம் விற்பனை மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கையாக மாறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.