One Bitcoin price in india.
One Bitcoin price in india.

Bitcoin ஞாபகம் இருக்கா மக்களே? இப்போது இந்தியாவில் அதன் விலை என்ன தெரியுமா? 

கிரிப்டோ கரன்சியின் உலகம் என்பது சமீப ஆண்டுகளில் வீழ்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையைக் கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக பிட்காயின் என்பது டிஜிட்டல் கரன்சி சந்தையில் நாம் யாரும் மறுக்க முடியாத தலைவனாக உருவெடுத்தது நாம் அனைவருக்குமே தெரியும். அனைவருக்கும் தெரிந்த ஒரு பரவலான டிஜிட்டல் நாணயமாக முதலீட்டாளர்கள் மத்தியில் பிட்காயின் நல்ல மதிப்பைப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் பிட்காயினின் தற்போதைய நிலை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? 

இந்தியாவில் பிட்காயின் விலை அதன் தொடக்கத்தில் இருந்தே குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தொடக்க காலத்தில் பிட்காயின் பற்றி மக்களுக்கு தெரியாதபோது அதன் மதிப்பு மிகக் குறைவாக இருந்தது. இருப்பினும் இது பற்றிய விழிப்புணர்வால் மக்களின் ஆர்வம் அதிகரித்ததால் அதன் விலை கிடு கிடுவென உயர்ந்தது. 2017 ஆம் ஆண்டில் பிட்காயின் ஒரு நம்ப முடியாத Bull மார்க்கெட்டை சந்தித்தது. அந்த சமயத்தில் உலக அளவில் சுமார் 20000 டாலர்கள் என்ற விலைக்கு உச்சத்தைத் தொட்டது. 

இருப்பினும் இதன் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக போனதால் சந்தை மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக விழத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளின் நிச்சயமற்ற தன்மை காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் இவற்றை வாங்கவில்லை. மேலும் 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி கிரிப்டோ கரன்சிகளை கையாளுவதில் இருந்து வங்கிகளுக்கு தடை விதித்தது. 

இதில் பல சவால்கள் இருந்த போதிலும் இந்திய கிரிப்டோ கரன்சி சந்தை பல மூன்றாம் தரப்பு புரோக்கர்கள் மூலமாக எளிதாக பரிமாற்றம் செய்யும் முறைகள் வந்ததால், பிட்காயின் உட்பட டிஜிட்டல் சொத்துக்களில் இந்தியர்களின் முதலீடுகள் அதிகரித்தது. அதுவும் 2021ஆம் ஆண்டு பிட்காயின் விலை நாம் யாரும் நம்ப முடியாத உச்சத்தைத் தொட்டது. கோவிட் காலத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்று, பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் மக்களின் ஆர்வம் காரணமாக உலக அளவில் பிட்காயின் முதலீடுகள் அதிகரித்து 68000 டாலர்களுக்கும் மேல் தாண்டிச் சென்றது. 

இதையும் படியுங்கள்:
கிரிப்டோ கரன்சிக்கு சீனாவில் தடை: அதன் மதிப்பு உலகளவில் சரிவு!
One Bitcoin price in india.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அரசாங்கம் கிரிப்டோ கரன்சி மற்றும் டிஜிட்டல் சொத்துக்களின் ஒழுங்குமுறை மசோதாவை முன்மொழிந்து, அனைத்திற்கும் வரி விதிக்கப்படும் என தெரிவித்ததால், கிரிப்டோ கரன்சிகள் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியை நோக்கி சென்றன. இப்போது மக்கள் மத்தியில் பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகளின் மீது அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை. இருப்பினும் இன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் ஒரு பிட்காயினின் விலை சுமார் 33 லட்சமாக உள்ளது. அதாவது ஒரு பிட்காயின் விலை சுமார் 40,882 அமெரிக்க டாலர்களாகும்.

logo
Kalki Online
kalkionline.com