
இன்றைய காலகட்டத்தில் செல்போன் அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. இதனை கருத்தில் கொண்ட செல்போன் நிறுவனங்களுக்கும் புதுப்புது மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம், கே 13 எக்ஸ் 5-ஜி என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஓப்போ நிறுவனத்தின், கே 13 5ஜி மாடல் ஸ்மார்ட்போனின் அடுத்த சீரிஸான கே 13 எக்ஸ் 5-ஜி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
துல்லியமான கேமராவுக்காக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளதால் ஓப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளன என்றே சொல்லவேண்டும். ஐபோன் வாங்க முடியாதவர்களின் கனவை நிறைவேற்றுவது ஓப்போ ஸ்மார்ட்போன்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது.
அதன் சிறப்பம்சங்கள்...
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
இது 5ஜி இணைப்புடன் வருகிறது.
6 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. உள்நினைவகம்
6.67 அங்குல எச்.டி + எல்.சி.டி தொடுதிரை கொண்டது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் வகையில் 120 எச்.இசட். ரெஃப்ரஷ் ரேட் கொண்டது.
ரெசல்யூசன் 1604x720 பிக்சல்ஸ்
திரையின் வெளிச்சம் 1000 நிட்ஸ்
6,000 எம்.ஏ.எச். பேட்டரியுடன் சூப்பர்வூக் 45 வாட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது. இதனால் அரை மணிநேரத்தில் 50% சார்ஜ் ஆகிவிடும் என்றும், 5 வருடம் நீடித்து உழைக்கும் வகையில் பேட்டரி 80 சதவிகிதம் அதன் அசல் சக்தியுடன் இருக்கும் என்றும் ஓப்போ அறிவித்துள்ளது.
மீடியாடெக் டைமென்சிட்டி 6300 ஆக்டா கோர் புராசசர்
பின்புறம் இரண்டு கேமராக்களுடன் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா + 2 மெகாபிக்சல் செகண்ட் கேமரா மற்றும் 8 எம்பி மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது. புகைப்படம் எடுக்கும்போது ஏற்படும் தேவையற்ற ஒலி மற்றும் மங்களான தன்மையை நீக்கும் சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி முன் மற்றும் பின் கேமராக்களைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
தண்ணீர் மற்றும் துசியில் இருந்து பாதுகாக்கும் சிறப்பு அம்சங்கள்
இரண்டு சிம்கார்டு வசதி
எடை 194 கிராம்
மிட்நைட் வைலட் மற்றும் சன்செட் பீச் இரண்டு கலர்களில் கிடைக்கிறது.
6 ஜி.பி. ரேம் கொண்ட போனின் விலை ரூ.11,999.