பாகிஸ்தானில் வரலாறு காணாத பணவீக்கம்.. 
டாலருக்கு நிகரான
பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி!

பாகிஸ்தானில் வரலாறு காணாத பணவீக்கம்.. டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி!

ண்டை நாடான பாகிஸ்தானில் பணவீக்கம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது கடந்த மே மாதம் 38% ஆக இருந்தது. வருடாந்திர பணவீக்கம் 27.8% ஆக ஆகஸ்டு மாதம் குறைந்த போதும், உணவுப் பொருட்களின் பணவீக்கம் 38.5% ஆக உள்ளது.

இதன் காரணமாக, நாடெங்கிலும் உள்ள வணிகர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.கிட்டத்தட்ட திவாலாகும் நிலையிலிருந்த பாகிஸ்தானைக் காப்பாற்றுவதற்கு, கடைசி முயற்சியாக பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund) கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி அளித்துள்ளது. அதனுடன், மானியங்களை நிறுத்துவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை நாட்டிற்கு விதித்துள்ளது.

இதன் காரணமாக, பாகிஸ்தானில் எரிபொருள் மற்றும் பயன்பாடுகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 300 ரூபாயாக விற்பனைச் செய்யப்படுகிறது. அதேபோல்,வரலாறு காணாத அளவிற்கு 1 டாலருக்கு பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு 300 ரூபாயாக குறைந்துவிட்டது. கடந்த மாதத்தில் மட்டும், ரூபாய் 6.2% தனது மதிப்பிழந்துள்ளது. இதன் காரணமாக, இறக்குமதிக்கு பெரும் பணத்தை நிறுவனங்கள் தர வேண்டியுள்ளது. இதன்காரணமாக தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்துவருகிறது.

பொருளாதார பிரச்சனைகளும், வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலை ஒட்டி அமைந்துள்ள அரசியல் பிரச்சனைகளும் சேர்ந்த காரணத்தில், நாட்டில் அங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன.முக்கிய பொருளாதார மையமான கராச்சியில், வணிகர்கள் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தினர். இதைப் போலவே, பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர்.

பொதுப் போக்குவரத்து தடைபட்டது. பேஷாவர், குவெட்டா போன்ற பெருநகரங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கராச்சியில், கடை வணிகர் ஒருவர், தங்களது பிரச்சனை அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகக் கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார நிலைமை குறித்து பிரபல பொருளாதார நிபுணரும், டாப்லைன் செக்யூரிட்டீஸ் நிறுவனத் தலைவருமான முகம்மது சோஹைல் கூறுகையில், பன்னாட்டு பண நிதியத்தின் உதவி இருந்தபோதும், பாகிஸ்தான் சவாலான காலத்தை சந்தித்துவருகிறது. பன்னாட்டு பண நிதியத்தால் கட்டாயப்படுத்தப்படும் பொருளாதார சீர்த்திருத்தங்கள், அரசியல் காரணங்களால் மக்களின் உணர்ச்சிபாங்கு அதிகமாக உள்ளது.

மேலும், பாகிஸ்தானில் தொடர்ந்து நீடித்துவரும் பணவீக்கம் காரணமாக சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. ரூபாயின் வீழ்ச்சி பணவீக்கத்தின் பெரும் காரணியாக உள்ளது. அதிகரிக்கும் அந்நிய செலவாணியுடன் கூடிய, பணத்தை நிலைப்படுத்த முயற்சிகள் , ரூபாயினை நிலைப்படுத்தி, பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.

பாகிஸ்தானின் மத்திய வங்கி, அடிப்படை வட்டி விகிதத்தினை 22% என அதிகரித்தது. அடுத்த 12 மாதங்களில் பணவீக்கம் படிப்படியாக குறையும் என கூறியது. இந்தப் போராட்டங்களைக் குறித்து கேள்வி எழுப்பியபோது, பாகிஸ்தானின் பிரதம மந்திரி அன்வரும் ஹக் காகர், அவற்றைச் சட்டை செய்யாமல், அவை ஒரு பிரச்சனை இல்லை எனக் கூறினார்.பணவீக்கத்தினை எவ்வாறு பாகிஸ்தான் கட்டுக்குள் கொண்டுவரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com