செல்வமகள் திட்டம் தெரியும், அது என்ன பொன்மகன் திட்டம்? இந்த சேமிப்புத் திட்டம் பற்றித் தெரியுமா?

savings-schemes
savings-schemes
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு (Sukanya Samriddhi Yojana) மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்டம் (Ponmagan Podhuvaippu Nidhi) இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படும் ஒரு சிறந்த நீண்டகால சிறு சேமிப்புத் திட்டமாகும். இது செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு இணையாக ஆண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக கொண்டுவரப்பட்டது.

இதன் முக்கிய அம்சங்கள்:

*10 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு பாதுகாவலர் மூலமும், 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களாகவே அஞ்சலகத்தில் கணக்குத் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.

*ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப் படும். இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை சேமிக்க முடியும்.

*முதிர்வு காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் சேமிப்பை தொடர விரும்பினால் 5 ஆண்டு தொகுப்புகளாக கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம்.

*பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் கூட சிறு சேமிப்பு மூலம் தங்கள் மகனின் எதிர்காலத்திற்காக பெரும் நிதியை திரட்ட முடியும். நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

*இது ஒரு பொது வைப்பு நிதி சார்ந்த திட்டம் என்பதால், இதற்கான வட்டி விகிதங்கள் மத்திய அரசால் அவ்வப்பொழுது மாற்றி அமைக்கப்படுகின்றன. இருப்பினும் இது மற்ற சேமிப்புகளைவிட சிறந்த வட்டியை வழங்குகிறது.

*இத்திட்டத்தில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு. கணக்கை தொடங்கிய 7வது ஆண்டிலிருந்து அவசர தேவைகளுக்காக சேமிப்புத் தொகையில் பாதியை (50%) எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

*இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமானவரிச் சட்டம் பிரிவு 80C யின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும் முதிர்வின்பொழுது கிடைக்கும் மொத்த தொகைக்கும் வட்டிக்கும் வரி கிடையாது.

இதையும் படியுங்கள்:
வாகனம், வீடு, விபத்து, கடும் நோய், பயணம் சார்ந்த காப்பீடுகள் பற்றித் தெரியுமா?
savings-schemes

*இத்திட்டம் ஆண் குழந்தைகளின் உயர்கல்வி, வெளிநாட்டு படிப்பு அல்லது அவர்களின் தொழில் தொடக்கத்திற்கான மூலதனம் என பல்வேறு தேவைகளுக்கு இந்த சேமிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

*இந்தத் திட்டம் தபால் நிலையங்களில் (Post Office) மட்டுமே தொடங்க முடியும். அரசு சார்ந்த திட்டம் என்பதால் 100% பாதுகாப்பு உண்டு.

தேவையான ஆவணங்கள்:

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோர்/பாதுகாவலரின் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் புகைப்படம்.

logo
Kalki Online
kalkionline.com