உங்கள் பணம் பத்திரம்! பங்குச்சந்தையின் இருண்ட ரகசியங்கள் - முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

Stock market scams and safety precautions
Stock market scams
Published on

பங்குச்சந்தையில்(Stock market) நடக்கும் மோசடிகள் என்பது முதலீட்டாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்களாகும். இதில் ஹர்ஷத் மேத்தா ஊழல்(1992), கேதன் பரேக் ஊழல், சத்யம் ஊழல் போன்ற பெரிய மோசடிகள் வரலாற்றில் உள்ளன. இதில் போலியான பத்திரங்கள், insider trading, price manipulation போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சிதைத்து லாபம் ஈட்டுகிறார்கள். மேலும் சமீப காலங்களில் டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.

பொதுவான பங்குச்சந்தை மோசடி முறைகள்:

1. உள்ளக வர்த்தகம் (Insider Trading):

நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி, அவை பகிரங்கமாகும் முன் பொது மக்களுக்கு தெரியாத நேரத்தில் பங்குகளை வாங்கி விற்பது.

2. Pump and Dump:

குறைந்த விலையுள்ள பங்குகளை வாங்கி, அதைப்பற்றி மிகைப்படுத்தி பேசி விளம்பரம் செய்து விலையை உயர்த்தி, பின்னர் அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுவது.

3. பொன்சி திட்டங்கள்(Ponzi Schemes):

புதிய முதலீட்டாளர்களின் பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு லாபமாக வழங்குவது.

4. போலி நிறுவனங்கள்(Fictitious Companies):

போலி நிறுவனங்களை உருவாக்கி முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்வது.

5. போலி ஆவணங்கள்/கணக்குகள்:

போலியான நிதி அறிக்கைகள் அல்லது வங்கி ஆவணங்களை பயன்படுத்துவது.

6. சந்தை கையாளுதல்(Market Manipulation):

குறிப்பிட்ட பங்குகளை செயற்கையாக வாங்கி விற்பதன் மூலம் அதன் விலையை உயர்த்துவது அல்லது குறைப்பது.

7. டிஜிட்டல் மோசடிகள்:

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் கணக்குகளை ஹேக் செய்வது அல்லது தவறான ஆலோசனைகள் வழங்குவது.

மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

1. இதற்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை(SEBI விதிகளை) அறிந்து கொள்வது அவசியம்.

2. ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

3. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான தரகர்கள் மூலம் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும்.

4. பங்குச்சந்தை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

5. ஒரே நாளில் பணம் சம்பாதித்து விடலாம் என்று நினைத்து பென்னி ஸ்டாக் என்று அறியக்கூடிய மிகக் குறைவான மதிப்புள்ள பங்குகளை வாங்குவதும், மிகவும் பரிச்சயமான பங்குகளை நன்கு ஆராயாமல் அதிக விலை கொடுத்து வாங்குவதும் தவறு.

6. ஒரு பங்கில் நஷ்டம் ஏற்பட்டால் அதே பங்கை விலைக் குறைவாக வாங்கி சரி செய்ய நினைப்பது தவறு.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் டாப் 5 மாவட்டங்கள்!
Stock market scams and safety precautions

7. ஒரு முறை நஷ்டம் ஏற்பட்டால் பொறுமை இழந்து மீண்டும் மீண்டும் அதே தவறை செய்வது மற்றும் தரகர்களுடைய அறிவுரைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

8. பங்குகளின் விலையை வைத்து அதன் மதிப்பை கணக்கிடுவது மற்றும் அனைத்து முதலீடுகளும் ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்வது போன்றவை தவறு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com