இந்திய பொறியியல் துறை ஏற்றுமதியில் வரலாறு காணாத முன்னேற்றம்!


Indian Department of Engineering
Indian Department of Engineeringhttps://tamil.goodreturns.in/

ந்திய பொறியியல் துறை ஏற்றுமதியில் வரலாறு காணாத முன்னேற்றம் கண்டு உள்ளது.

தீவிர வளர்ச்சி கண்டு வரக்கூடிய துறைகளில் ஒன்றாக உள்ளது பொறியியல் துறை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொறியியல் துறை மிதமான முன்னேற்றம் அல்லது தீவிர சரிவை கண்டு வருகிறது. ஆனால் இந்தியா தன்னுடைய பொருளாதார நிலை தன்மையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இதனால் மற்ற துறைகளில் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி வளர்ச்சி நோக்கி செல்கிறதோ அதேபோன்று பொறியியல் துறையிலும் இந்தியாவினுடைய ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை உயர்வை சந்தித்து இருக்கிறது என்று இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக இந்திய புவியியல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் அரையாண்டு பகுதி வரை இந்திய பொறியியல் துறையில் மிதமான முன்னேற்றத்தை சந்தித்திருக்கிறது. அதே காலகட்டத்தில் உலக பொருளாதாரத்தில் பொறியியல் துறையின் பங்கானது அபாயகரமானதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நிலையான பொருளாதாரத் தன்மை காரணமாக பொறியியல் துறையில் இந்தியா உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகில் முக்கிய நாடுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. அதே நேரம் இந்தியாவை தங்களுடைய முக்கிய கூட்டாளியாக பல்வேறு உலக நாடுகள் கருதுவதால் பொறியியல் துறை சார்ந்த ஏற்றுமதி உயர்வை கண்டிருக்கிறது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொறியியல் துறை சார்ந்த பொருட்களின் பங்களிப்பானது கடந்த அக்டோபர் மாதத்தில் 1391.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இதை கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் ஒப்பிட்டால் 2.2 சதவீத வளர்ச்சியாகும். ஜெர்மனிக்கு 342.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொறியியல் துறை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இது 20 சதவீத வளர்ச்சியாகும். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 348.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நவகுஞ்சரம் என்றால் என்னவென்று தெரியுமா?

Indian Department of Engineering

இது 2.9 சதவீத வளர்ச்சியாகும். இவ்வாறு இந்தியா விலிருந்து பொறியியல் துறைச் சார்ந்து ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பங்களிப்பானது 8094. 20 பில்லியன் அமெரிக்க டாலரர்கள் ஆகும். இது 7.2 சதவீத வளர்ச்சி ஆகும். அதே காலகட்டத்தில் உலகில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொறியியல் துறைச் சார்ந்த பொருட்களின் பங்களிப்பு 1.61 சதவீத வீழ்ச்சியை கண்டிருக்கிறது.

இது மட்டுமல்லாது இந்தியா உலோகத்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. இவ்வாறு இரும்பு, சீல்டு, அலுமினியம், துத்தநாகம் போன்ற பல்வேறு உலோக களன்கள் ஏற்றுமதியும் முன்னேற்றத்தை கண்டு இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com