ரிட்டயர்மென்ட்டு தொகையை எதிலெல்லாம் முதலீடு செய்யலாம்?
ரிட்டயர்மென்ட்டுப் பிறகு சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய பணிக்கால செட்டில்மென்ட்டாக பெறும் தொகையை (தோராயமாக 50 லட்சம்) எதிலெல்லாம் முதலீடு செய்தால் அவர்களுக்கு மாத மாதம் நல்ல வட்டி வரும்?
ஓய்வு காலத்தில் ஓய்வு பெற்றவர் சம்பாதிப்பது இல்லை. எனவே ஓய்வு காலத்தில் பெற்ற ஓய்வுகால தீர்வுத் தொகையை இத்தகைய மாதாந்திர வருமானத் திட்டங்களில் முதலீடு செய்தால், காலம் செல்ல செல்ல பணம் வீக்கத்தின் காரணமாக இத்தகைய மாதாந்திர பணத்தின் அளவு போதாமல் போய்விடும். இந்தியாவில் பணவீக்கமானது 6% என கொள்ளலாம். எனவே, இந்த 50 இலட்ச ரூபாய் பணத்தை மூன்று வாளிகளாகப் பிரிக்க வேண்டும். முதல் வாளி (5 வருடங்களுக்கான பணம்), இரண்டாவது வாளி (5 முதல் 10 வருடங்களில் பணத்தைப் பெருக்க), மூன்றாவது வாளி (10 வருடங்கள் தாண்டி பணத்தைப் பெருக்க) என பணத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் தேவைப்படும் தொகை 25 ஆயிரம் எனில், ஒரு வருடத்திற்கு 3 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஒரு வருடத்திற்கான செலவை எடுத்து வைத்துக் கொண்டு, முதல் வாளியில், அடுத்த 5 வருடங்களுக்கு, 5 வைப்பு நிதிகளை 3 இலட்ச ரூபாயில் தொடங்க வேண்டும். முதல் வைப்பு நிதி, ஒரு வருடத்திற்கு, இரண்டாவது வைப்பு நிதி இரண்டு வருடகளுக்கு என முதலீடு செய்யப்பட வேண்டும். அதன் மூலம், ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தினை நம்மால் சமாளிக்க முடியும்.
இப்போது 18 இலட்ச ரூபாய் எடுத்தாகி விட்டது. இரண்டாவது வாளியில், மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்து, அவற்றில் வரும் வட்டியை தொடர் வைப்பு நிதியில் மறுமுதலீடு செய்ய வேண்டும். 17 இலட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்யலாம். மூன்றாவது வாளியில் மீதமுள்ள, 15 இலட்சம் ரூபாயினை பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், நமது பணத்தை பணவீக்கத்தினை தாண்டி வளர வைக்க முடியும். 5 வருடங்கள் தாண்டிய பிறகு, இரண்டாவது வாளி, முதல் வாளிக்கு பணத்தைக் கொடுத்து உதவும். மூன்றாவது வாளி, இரண்டாவது வாளிக்கு பணத்தைக் கொடுத்து உதவும். மீதமுள்ள பணத்தில் மூன்றாவது வாளியில் முதலீடுகளைத் தொடர வேண்டும். இன்னும் வயது கூடும் போது, வருடாந்திரம் பணம் கொடுக்கும் ஓய்வூதிய திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், தொடர்ந்து வருவாய் பெறலாம்.
Is there any major risk for capital in index fund investment for long term investment (let assume the target to save 1 crore within 10-15 years)?
பங்கு சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலீட்டில் இருந்து எப்போது வெளி வருகிறோம் என்பது முக்கியமானது. இதனை ஆங்கிலத்தில் வெளிவரும் யுக்தி என்று கூறுவார்கள் அதாவது Exit Strategy. நீங்கள் 2005 இல் முதலீடு செய்து, 2020 இல் கொரோனா போன்ற சமயத்தில் பங்குச் சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் இருந்து வெளியேறி இருந்தால் உங்களது முதலீடு நஷ்டத்தில் கூட இருந்திருக்கலாம். எனவே நீண்ட கால குறிக்கோள்களுக்கு (> 10 வருடங்கள்) பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதியைப் பயன்படுத்தும் போது குறிக்கோளுக்கு தேவைப்படும் பணத்திற்கு அருகில் வந்த போது, பங்கு சந்தை நல்ல நிலையில் இருக்கும்பொழுது, முதலீட்டில் இருந்து வெளிவர வேண்டும். தவறான காலத்தில் வெளியேறினால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
Can we do one-time bulk investment in index fund using 'buy and hold' strategy?
நிச்சயமாக. பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளில் நீண்டகாலத்தில் முதலீடு செய்யும் பொழுது மொத்தமாக முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட காலம் என்று காத்திருக்க வேண்டியதில்லை. தேவைப்பட்டால் முதலீட்டை நான்காக பிரித்து நான்கு வாரங்களில் முதலீடு செய்து முதலீட்டினை தொடங்கி விடலாம். முதலீட்டினை தள்ளி போடக்கூடாது. சீக்கிரமாக தொடங்க வேண்டும்.
Do I diversify my investment allocation on different assets (index fund, gold, real estate)?
முதலீடுகளைப் பரவலாக்குவது என்பது முதலீடுகளில் ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க உதவும். பரவலாக்கம் என்பது பல்வேறு வகை முதலீடுகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு முதலீட்டிற்குள்ளும் பரவலாக்கம் வேண்டும். பொதுவாக பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த பரவலாக்கம் போதுமானது. 110 - வயது என்கிற சாம்யத்தின்படி, 30 வயது நபர், 110 - 30 =80% பங்குகளிலும், மீதி 20% கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம்.
பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் பரஸ்பர நிதிகள் வாயிலாக முதலீடு செய்வது என்பது பரவலாக்கத்திற்கு உதவும். தங்கத்தில் முதலீடு என்பது அவசியமல்ல. தேவைப்பட்டால் அதிகபட்சமாக 3% முதல் 5% வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்கம் நீண்ட காலத்தில் பண வீக்கத்தினை ஒட்டியே வளர்கிறது. நிலத்தில் முதலீடு அவசியம் அல்ல. இருக்கும் வீடு போதுமானது. எனவே, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த பரவலாக்கமே போதுமானது. மேலும், வருடாந்திர சமன்படுத்துதல் (annual rebalancing) செய்ய வேண்டும். அப்போது, முதலீட்டின் பரவலாக்கம் காக்கப்படும். பணமும் இன்னும் நன்றாக பெருகும்.