புவி வெப்பமடைவதால் உயரும் பணவீக்கம்!

Inflation
Inflation

புவி வெப்பமடைவதால் பல்வேறு உலக நாடுகள் பண வீக்கத்தை சந்தித்திருப்பதாக ஐரோப்பிய மத்திய வங்கியை தெரிவித்து இருக்கிறது.

பூமியில் அதிகரித்து வரும் வெப்பம் பொருளாதாரத்தின் சீற்றத் தன்மைக்கு காரணமாக மாறி இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் மீது விலை உயர்வு ஏற்படவும் வழி வகுத்து இருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் 2023 ஆம் ஆண்டு பண வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்று ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி நடத்திய ஆய்வு அறிக்கையின் முடிவின் படி 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வெப்பத்தால் உணவு விளைச்சல் சீர்குலைத்து இருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் ஏற்பட்டிருக்க கூடிய வறட்சி, இந்தியாவில் ஏற்பட்ட சீரற்ற பருவமழை உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்திற்கு காரணமாக மாறி இருக்கிறது. குறிப்பாக உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக விளங்கும் இந்தியா நடப்பு ஆண்டு ஜூலை மாதம் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதை அடுத்து உலகில் பல்வேறு நாடுகளில் அரிசியின் விலை 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விலை உயர்வை கண்டது. இதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்து வரும் நாடுகள், வளரும் நாடுகள் என்று அனைத்து தரப்பு நாடுகளும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
எல்லை தாண்டிய க்யூ ஆர் பரிவர்த்தனையை தொடங்கிய சீனா!
Inflation

தற்போது துபாயில் நடைபெற்று முடிந்த சுற்றுச்சூழல் மாநாடு 2023 ஆம் ஆண்டை அதிக வெப்பம் நிலவிய ஆண்டாக பதிவு செய்திருக்கிறது. இப்படி அதிக வெப்பத்தின் காரணமாக உலக உணவுப் பொருள் சந்தை பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதார சரிவை நாடுகள் சந்தித்து இருக்கின்றன. புவி வெப்பமடைவதால் ஏற்படும் பணவீக்கம் வெப்பப்பண வீக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பண வீக்கம் நடப்பாண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார இழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதேநிலைத் தொடர்ந்தால் 12 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை 50 சதவீதம் உயர்வை காணும் என்று தெரிவிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com