எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் முன்னணி நாடுகள்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபயம்!

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்Editor 1

ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா இணைந்து எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயயினுடைய விலை அதிகரிக்கக்கூடும், இந்தியவில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் தொடங்கியதை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. இதை அடுத்து ரஷ்யா தன்னுடைய பொருளாதார நிலையை பாதுகாக்கும் பொருட்டு கச்சா எண்ணெயை சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறது. இதனால் கச்சா எண்ணெயினுடைய சர்வதேச சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியா அரசு கச்சா எண்ணெயினுடைய சர்வதேச சந்தை மதிப்பை அதிகரிப்பதற்காக ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட தொடங்கியது. இதற்கு சவுதி அரேபியாவினுடைய நட்பு நாடான அமெரிக்கா கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியாவிற்கு நேரடியான எச்சரிக்கையையும் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயினுடைய மதிப்பை உயர்த்துவதற்காக சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த அறிவிப்பில் நடப்பு ஆண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இவ்வாறு நாள் ஒன்றுக்கு 13 லட்சம் கோடி பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவின் இந்த கூட்டு அறிவிப்பு மீண்டும் கச்சா எண்ணெயினுடைய சர்வதேச சந்தை மதிப்பை உயர்த்தக்கூடும். இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் எண்ணெய்களின் விலையற்றத்தை சந்திக்க கூடும்.இந்த அறிவிப்பை தொடர்ந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சந்தை மதிப்பு உயர தொடங்கி இருக்கிறது. இதனால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 டாலர்களை எட்டி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com