இந்தியர்கள் அதிக அளவில் கடன் பெறுவதாக எஸ்பிஐ தகவல்!

SBI BANK
SBI BANK

ந்தியர்கள் தற்போது அதிக அளவில் கடன் பெற்று வருவதாகவும், மேலும் வீட்டு உபயோக பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்க கடன் பெறுவதாக எஸ்பிஐ ரிசர்ச் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ ரிசர்ச் அமைப்பு ஆய்வு முடிவு, இந்திய மக்கள் தொகையில் மிகப் பெரும் பகுதியினர் ஏழை எளிய நடுத்தர மக்களே. அவர்கள் தங்கள் வருமானங்களின் பெரும்பகுதியை அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவ தேவைகளுக்கும் என்ற பல காரியங்களுக்கு செலவழித்து விடுகின்றனர். இதனால் இந்திய குடும்பங்களினுடைய சேமிப்பு என்பது தற்போது மிகப் பெரும் அளவில் குறைந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் விலைவாசி உயர்வு. இளைஞர்களுக்கு போதிய அளவு வேலை வாய்ப்பு இல்லாததும், குடும்பங்களின் வருமான இழப்பிற்கு காரணமாகிறது. இதனால் இந்திய குடும்பங்களின் சேமிப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறுக சிறுக குறைந்து வருகிறது.

2021 - 22 ஆம் நிதியாண்டில் இந்திய குடும்பங்களில் நிகர சேகரிப்பு 55 சதவீதமாக இருந்த நிலையில் 2022- 23 நிதியாண்டில் இந்திய குடும்பங்களின் நிகர சேகரிப்பு 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும் இந்திய குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகள் மருத்துவத் தேவைகள், வீட்டு உபயோக பொருட்கள், வாகனங்கள், செல்போன்கள் வாங்க அதிக அளவில் கடன்களை பெற்றுள்ளனர். 2021- 22 ஆம் நிதியாண்டில் இந்திய குடும்பங்கள் பெற்ற கடன் தொகை 8.2 லட்சம் கோடியாக இருந்த நிலையில் இது கடந்த நிதியாண்டில் 2 மடங்கு உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு இந்திய குடும்பங்கள் பெற்றுள்ள கடன் தொகை 15.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் இந்திய குடும்பங்களின் உடைய வருமானம் பல ஆண்டுகளாக அதே சராசரியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com