விவசாயிகளும் சிபில் ஸ்கோரை பராமரிக்க வேண்டுமா?

Cibil Score
Cibil Score
Published on

வங்கிகள் வழங்கும் சிபில் ஸ்கோரை பராமரிப்பதில் விவசாயிகளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சிபில் ஸ்கோரை பராமரிப்பதால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

சிபில் ஸ்கோர் என்பது கடன் பெறத் தகுதி இருக்கிறதா என்பதை வெளிப்படுத்த வங்கிகள் நமக்கு அளிக்கும் மதிப்பெண் ஆகும். வங்கிகளில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை காலம் தாழ்த்தாமல் கட்டி முடித்தால், நம்முடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும். அதுவே கடனை சரியாக திருப்பிச் செலுத்தாமலும், தாமதமாக கட்டினாலும் சிபில் ஸ்கோர் குறையும். இன்றைய காலகட்டத்தில் வங்கிக் கடனை பலரும் வாங்கும் நிலையில், சிபில் ஸ்கோர் முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. மாதச் சம்பளம் வாங்குவோர், சுயதொழில் செய்பவர்கள் என பலரும் சிபில் ஸ்கோரை குறையாமல் பராமரித்து வரும் நிலையில், விவசாயிகளும் சிபில் ஸ்கோரை பராமரிக்க வேண்டுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் விவசாயிகளும் அதிகளவில் வங்கிக் கடனைப் பெற்றுத் தான் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர். கடன் சார்ந்த விஷயங்களில் அரசு சார்பில் பல சலுகைகள் இருப்பினும், அவை முறையாக விவசாயிகளைச் சென்றடைகிறதா என்பது கேள்விக்குறி தான். இருப்பினும் பட்டத்திற்கு ஏற்ப பயிர்களை மாற்றி விளைவிக்கும் போது, எதிர்பாராத இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிப்படையும் போது கடனை முறையாக திருப்பி செலுத்த முடியாமல் போகும். ஒருவேளை காப்பீடு கிடைத்தாலும், அதில் செலவிட்ட பணமாவது கைக்கு வருமா என்பது கூட சந்தேகம் தான்.

இப்படியான இக்கட்டான சூழலில் பரிதவிக்கும் விவசாயிகளுக்கு, வங்கிகள் வழங்கும் சிபில் ஸ்கோர் மிகவும் முக்கியம். எத்திசையிலும் உதவி கிடைக்காத சமயத்தில், வங்கியில் மீண்டும் கடன் வாங்கி இழந்ததை மீட்ட முயற்சிக்க முடியும். இதற்கு சிபில் ஸ்கோர் அவசியமாகும்.

எளிதான கடன் வழங்கல்:

விவசாயிகள் சிலர் டிராக்டர் மற்றும் புதிய கருவிகளை வாங்க நினைத்தாலும், பண்ணையை விரிவாக்கம் செய்ய நினைத்தாலும் வங்கிக் கடனைத் தான் பெரிதும் நம்பியுள்ளனர். சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால், இந்தக் கடனை எளிதாக பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
நேரம் தவறாமல் EMI செலுத்தியும் சிபில் ஸ்கோர் குறையுதா? இதான் காரணம்!
Cibil Score

காப்பீடு பிரீமியங்கள்:

சில காப்பீட்டு நிறுவனங்கள், பிரீமியத் தொகையின் அளவை நிர்ணயிக்கும் போது, விவசாயிகளின் சிபில் ஸ்கோரையும் சரிபார்க்கின்றனர். சிபில் ஸ்கோர் 750-க்கும் மேல் இருக்கும் போது பிரீமியம் குறைய வாய்ப்புள்ளது.

கடன் பெறும் மாற்று வழிகள்:

விவசாயிகள் எப்போதும் ஒரே ஒரு வழியில் மட்டும் கடனைப் பெற முயற்சி செய்யாமல், சில வணிக நிறுவனங்களிலும் முயற்சி செய்யலாம். இதற்கு உங்களின் சிபில் ஸ்கோர் வலுவான நிலையில் இருப்பது அவசியம்.

தொழில்நுட்ப தழுவல்:

சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்கும் விவசாயிகள், ஸ்மார்ட் நீர்ப்பாசன முறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாயக் கருவிகள் ஆகியவற்றிற்கு பணம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளை பெறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com