முதலீடு எனும் மந்திரம்.. பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ள சிம்பிள்மேன்!

முதலீடு எனும் மந்திரம்.. பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ள சிம்பிள்மேன்!

பிரபல வர்த்தக நிபுணரான ராஜிவ் மேத்தா தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மேல்சட்டை இல்லாமல் வெறும் டவுசர் மட்டும் அணிந்திருக்கும் வயதான முதியவர் ஒருவர் தான், பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து பல கோடிகள் சம்பாதித்து இருப்பது தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

பொதுவாக நிறுவனங்களின் பங்குசந்தையில் முதலீடு செய்துவது சாதக பாதகங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்த நிறுவனம் பங்குசந்தையில் முன்னேறினால் அதில் முதலீடு செய்த நபரின் தொகையும் வளர்ச்சி காணும். அதேபோல், நிறுவனத்தின் பங்கு சரிவை சந்தித்தால் முதலீடு செய்த தொகைகூட கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என விளம்பரம் செய்யப்படும்.

ஆனால், வர்த்தக நிபுணரான ராஜிவ் மேத்தா பகிர்ந்துள்ள வீடியோவில்,70 வயது மதிக்கதக்க பெரியவர் ஒருவர் தனக்கு பிரபல நிறுவனமான ‛‛எல் அண்ட் டி''யில் ரூ. 80 கோடி மதிப்புள்ள பங்குகளும், சிமென்ட் நிறுவமான அல்ட்ரா டெக்கில் ரூ. 21 கோடி மதிப்புள்ள பங்குகளும், கர்நாடக வங்கியில் ரூ.1கோடி மதிப்புள்ள பங்கும் உள்ளது என கூறுகிறார். அந்தகாலத்தைச் சேர்ந்த பிரம்மாண்ட வீடு, கார் மற்றும் இருசக்கர வாகனம் அவரின் வீட்டில் இருப்பதை வீடியோ மூலம் காணமுடிகிறது.

ஆனால், அந்த முதியவர் யார், அவரின் பெயர் என்ன, எந்த ஊரில் வசிக்கிறார் என்பதுபோன் தகவல்கள் எதுவும் வீடியோவில் குறிப்பிடப்படவில்லை.அதேநேரம் தனக்கு எல் அண்ட் டியில் ரூ. 80 கோடி மதிப்புள்ள பங்குகள் உள்ளது என முதியவர் தெரிவித்த தொகை மதிப்பு பங்குசந்தை புள்ளிகள் கணக்கீட்டிபடி மிக கூடுதலாக உள்ளது என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

முதியவர் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கலாம் என்றும்.. 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் என்பது கூடுதலான தொகை என சிலர் கமெண்டுகளில் கணக்கீட்டு தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com