குடிசையில் பிறந்து கோடிகளில் வாழ்வு.. தானுபே குழுமத்தின் கதை!

Danube Group.
Danube Group.
Published on

இந்தியாவின் மிக முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழும் தனுஷ் குடும்பத்தின் தலைவர் ரிஸ்வான் சாஜனின் வெற்றி பயணத்தைப் பார்போம்.

மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் பிறந்த ரிஸ்வான் சாஜன் என்பவர் இன்று ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் முன்னணி நூறு தொழிலதிபர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவை அத்தனையும் அவர்களுக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை.

மும்பையின் குடிசைப் பகுதியில் தனது வாழ்க்கையை தொடங்கிய சாஜன் பாதியிலேயே பொருளாதார நெருக்கடியின் காரணமாக பள்ளி படிப்பு விட்டார். அதன் பிறகு சிறிய சிறிய வணிக நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். அவை எவையும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் 1993 ஆம் ஆண்டு குவைத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்திக் கொண்ட ரிஸ்வான் பல்வேறு விதமான வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள், ஆரம்பக வீடுகள் தொடர்பான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினார்.

இதற்கு தானுபே நிறுவனம் என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு அபரிவிதமான தன்னுடைய உழைப்பால் குறைந்தபட்ச முதலீட்டுக்கான வருவாயை சேமித்து வைத்தார். பிறகு சாஜன் மீண்டும் மும்பைக்கு குடியேறினார். அப்போது மீண்டும் நெருக்கடி அவரை நெருங்கத் தொடங்கியது. பல்வேறு விதமான போட்டியாளர்களோடு போட்டியிடும் சூழல் உருவானது. அவற்றை எல்லாம் கடந்து 2006 ஆம் ஆண்டு சானிட்டரி சொல்யூஷன் பிராண்டுக்கான மிலாணோ நிறுவனத்தை தொடங்கினார்.

2008 ஆம் ஆண்டு தானுபே பிரிண்ட் பார் ஹோம் பர்னிச்சிங் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகு அலுமினிய பேனல் தயாரிக்கும் அலுகோபனல் நிறுவனத்தை 2012 ஆம் ஆண்டு தொடங்கினார். இவை ஓரளவுக்கு அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர 2013 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்தார்.

இதையும் படியுங்கள்:
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இடத்தை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை வழக்குரைஞர்!
Danube Group.

மும்பையில் நிலவிய நகர்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஏழை எளிய மக்களும் ஆடம்பர குடியிருப்புகளில் குடியேறும் வகையில் புரட்சிகர திட்டமான ஒரு சதவீத முன்பணத்தை செலுத்தினால் போதும், தவணை முறையில் மீத தொகை பெற்றுக் கொள்ளப்படும் என்ற திட்டத்தை அறிவித்தார். இது மிகப்பெரிய அளவில் அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. பிறகு ரியல் எஸ்டேட் துறையில் மிக முக்கிய நிறுவனமாக தானுபே நிறுவனம் மாறியது.

பிறகு தானுபே குழுமம் என்று உருவெடுத்தது. இப்படி கட்டுமானம், வீட்டு அலங்காரம், ரியல் எஸ்டேட், ஆடம்பர வீடுகள் கட்டுமானம் இன்று அடுக்கடுக்காக முன்னேறியது தானுபே குழுமம். தற்போது வருடத்திற்கு ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் நிறுவனமாக தானுபே குழுமம் மாறி இருக்கிறது. மேலும் குடிசையில் பிறந்த சாஜனுடைய தற்போதைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

நீண்ட கால தொடர் முயற்சியே இன்று மாபெரும் வெற்றியாளராக சாஜன் மாற காரணமாக இருந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com