இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கரும்பு விளைச்சல் நடப்பாண்டில் பெருமளவில் குறைந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
சர்க்கரை இனிப்பு என்பதை கடந்து ருசியை தரக்கூடியது. இதனால் சர்க்கரை மிக முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது. இனிப்பு வகைகள் தயாரிக்க மற்றும் பலவகை உணவுகள் தயாரிக்க முக்கிய மூலப் பொருளாக சர்க்கரை பயன்படுவதால் உலகம் முழுவதுமே அதிகம் தேவைப்படும் பொருளாக உள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கக் கூடிய பருவநிலை மாற்றத்தின் காரணமாக கரும்பு விளைச்சல் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. இதனால் சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை வரலாறு காணாத அளவிற்கு விலை ஏற்றத்தைக் கண்டு இருக்கிறது.
இந்தியாலும் கரும்பு அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் ஏற்பட்டிருக்க கூடிய மழையின்மை, கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக கரும்பு விளைச்சல் சரிவை சந்தித்து இருக்கிறது. இதனால் இந்தியாவிலும் சர்க்கரை தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக விலையற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் சர்வதேச சந்தையை ஓப்பிடும்போது இந்தியாவில் விலை ஏற்றம் என்பது மிக மிக குறைந்த அளவிலே இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஒரு மெட்ரிக் சக்கரையினுடைய விலை 3 சதவீதம் உயர்ந்து 37 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சர்வதேச சந்தையில் 38 சதவீதம் விலை உயர்வு காணப்படுகிறது. இந்தியாவில் ஏற்பட்டிருக்கக் கூடிய சர்க்கரை தட்டுப்பாடு காரணமாக ஒன்றிய அரசு சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.