இந்தியாவில் TAB விற்பனை சரிவு!
இந்தியாவில் TAB விற்பனை சந்தித்து வருவதாக ஆய்வு அறிக்கையில் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கணினி அடிப்படையான தேவையாக மாறி கொண்டிருக்கும் காலகட்டத்தில் கைக்குள் கணினியை சுருக்கி உலகத்தை அறிய உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பே கைக்கணினி டேப்லெட் ஆகும். கடந்த காலங்களில் டேப்லெட் பயன்பாடு உலகம் முழுவதும் அசுர வேக விற்பனையை கண்டது. ஆனால் தற்போது ஸ்மார்ட் போன்கள், ஆப்பிள் ஐபோன்களிலேயே டேப்லெட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைப்பதால் டேப்லெட்டினுடைய விற்பனை உலகம் முழுவதும் சரிவை சந்திக்க தொடங்கி இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை டேப்லெட் விற்பனை குறித்து சைபர் மீடியா ரிசர்ச் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நடப்பு ஆண்டில் ஜூன் வரையிலான காலகட்டத்தில் டேப்லெட்டினுடைய ஒட்டுமொத்த விற்பனை 22 சதவீதம் சரிவை கண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டதை விட தற்போது 22 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
டேப்லெட் விற்பனையில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் 25.38 சதவீதம் பங்குகளோடு முதன்மை இடத்தில் உள்ளது. சாம்சங் நிறுவனம் டேப்லெட் விற்பனையில் 25.31 சதவீதம் பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் விற்பனை நடப்பு நிதியாண்டின் காலாண்டு பகுதி வரை 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அதே நேரம் லெனோவா நிறுவனம் 23 சதவீத பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தினுடைய டேப்லெட் விற்பனை நடப்பாண்டில் 30 சதவீதம் சரிவை கண்டிருக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் உடைய பங்கு பாதியாக குறைந்து 8 சதவீதம் மட்டுமே உள்ளது. ஷாவ்மி நிறுவன டேப்லெட் விற்பனை சற்று உயர்ந்திருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒப்பிடும் பொழுது டேப்லெட்டினுடைய விற்பனை நடப்பாண்டி 22 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது.
டேப்லெட்டில் கிடைக்கக்கூடிய அம்சங்கள் பெரும்பான்மையாக ஸ்மார்ட் ஃபோன்களிலும், ஐபோன்களிலும் கிடைத்து விடுவதால் டேப்லெட் தேவை குறைந்துவிட்டது. இதனால் விற்பனை சரிவை சந்தித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் விற்பனையில் சற்று முன்னேற்றம் கண்டிருக்கக்கூடிய டேப்லெட்டுகளும் 5ஜி வகையைச் சேர்ந்தவையாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.