உலக முதலீட்டாளர் மாநாடு, தயாராகும் தமிழ்நாடு: விண்ணப்பங்கள் வரவேற்பு!

உலக முதலீட்டாளர் மாநாடு, தயாராகும் தமிழ்நாடு: விண்ணப்பங்கள் வரவேற்பு!

2024 ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க ஆர்வம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் தொழில் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டினுடைய பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்த தொழில்துறைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டினுடைய பொருளாதார சந்தை மதிப்பை மேம்படுத்தினார். அதன் பிறகும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பெருநிறுவனங்களின் முதலீட்டை பெறுவதற்கான முயற்சி ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் மீண்டும் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசின் தொழில் துறை முன்னெடுத்து வருகிறது. இதற்காக அமைச்சர் டிஆர்பி ராஜா பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுடன் பலக்கட்ட ஆலோசனையை நடத்தி உள்ளார். இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் இந்தியாவினுடைய உள்நாட்டு சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற அளவில் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை வாய்ப்பு, சிறுகுறு நிறுவனங்கள் வளர்ச்சியும் மேம்பட இது உதவும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில் tngim2024.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க ஆர்வமுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் மாநாட்டில் அமைக்கப்பட உள்ள கண்காட்சி ஸ்டாலமைக்க விருப்பமுள்ள நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு மாநாட்டை பார்ப்பதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

2024 ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கக்கூடிய உலக முதலீட்டாளர் மாநாடு இந்திய பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com