தமிழ்நாட்டில் ஐபோன் ஆலை அமைக்கும் டாடா!

Tata iPhone plant in Tamil Nadu.
Tata iPhone plant in Tamil Nadu.

தமிழ்நாட்டில் ஆப்பிள் ஐபோன் ஆலையை அமைக்கும் டாடா குழுமம்.

உலகை விரல் நுனியில் வசப்படுத்தி தந்திருக்கிறது ஸ்மார்ட் போன்கள். இதனாலையே ஸ்மார்ட் போன்களின் தேவையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஸ்மார்ட் போன்களின் பட்டியலில் தலைசிறந்த ஒன்றாக விளங்குகிறது. அதற்கு காரணம் அதனுடைய தரமும், கூடுதல் அம்சங்களும் ஆகும். அதேசமயம் ஐபோன் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பான்மையான மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே அதன் விற்பனையும் தொடர் உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஐபோனை உற்பத்தி செய்யும் முக்கிய இடமாக கருதிய சீனாவை தன்னுடைய முக்கிய கூட்டாளி என்ற நிலையில் இருந்து ஆப்பிள் நிறுவனம் விலக்கி இருக்கிறது. அதே சமயம் அதற்கு மாற்றாக இந்தியாவை தேர்வு செய்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை தீவிரப்படுத்தி வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்த விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் நிறுவனத்தை டாடா குழுமம் சில மாதங்களுக்கு முன்பு கைப்பற்றியது. இதை அடுத்து டாடா குழுமம் ஐபோனை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் உள்நாட்டு நிறுவனம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது. மேலும் ஐபோன் உற்பத்தி மற்றும் பாகங்கள் அசெம்பளி பிரிவை விரிவு படுத்தி இருக்கிறது டாடா. இது மட்டுமல்லாது இரண்டாவதாக புதிய ஆலை ஒன்றை தமிழ்நாட்டின் ஓசூரில் தொடங்க டாடா குழுமம் திட்டமிட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
அரிய வகை கருப்பு வைர ஆப்பிள் பற்றி தெரியுமா?
Tata iPhone plant in Tamil Nadu.

இந்த புதிய ஆலையில் 20 உற்பத்தி லைன்கள் அமைக்கப்பட உள்ளது. 50 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான பணியை மிக விரைவாக செய்து 18 மாதங்களுக்குள் ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர டாடா குழுமம் தற்போது தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆப்பிள் உற்பத்தி நடவடிக்கையில் பாக்ஸ்கான் நிறுவனத்தைத் தொடர்ந்து டாடா குழுமம் ஈடுபட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com