அமெரிக்க ஆப்பிள்களுக்கு வரி வாபஸ்:காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்!

Apple
Apple

மெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதலாக விதிக்கப்பட்ட வரியை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. இதை அடுத்து இந்தியாவில் விளைவிக்கப்படும் ஆப்பிள் பழங்களின் விலை வீழ்ச்சியை சந்திக்கும் என்று எதிர்க்கட்சினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தியாவில் பனிமலை பிரதேசங்களில் ஆப்பிள் உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. குறிப்பாக காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் ஆப்பிள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆப்பிள்கள் கூடுதல் ருசி அளிக்கக்கூடியவை என்ற கருத்து உலகம் முழுவதும் இருப்பதால் காஷ்மீர் ஆப்பிள்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.

ஆனால், அதேசமயம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் ஆப்பிள் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் வால்நட், பாதாம் பருப்பு போன்றவையும் அமெரிக்காவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இந்தியாவில் விளைவிக்கப்படும் ஆப்பிள், பாதாம் உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், உருக்கு போன்ற பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியது. இதற்கு எதிர்வினையாக இந்திய அரசும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், வால்நட், பாதாம் பருப்பிற்கு வரியை கூடுதல் படுத்தியது. இதனால் இந்தியாவில் விளைவிக்கப்படும் ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கத் தொடங்கின.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர், இந்திய பிரதமர் சந்திப்பை தொடர்ந்து, இந்திய அரசு தற்போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், வால்நட், பாதாம் பருப்பு போன்ற பொருட்களுக்கான கூடுதல் வரியை ரத்து செய்துள்ளது. அதேபோல அமெரிக்காவும் உருக்கு, அலுமினியம் போன்ற பொருள்கான கூடுதல் வரியை ரத்து செய்வதாக உறுதியளித்திருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு தற்போது தான் ஆப்பிள் உற்பத்தி தலை தூக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் கூடுதல் வரியை ரத்து செய்வது இந்திய விளைச்சலை பாதிக்கும் முயற்சி. அதே சமயம் இது அமெரிக்காவிற்கான பரிசு என்று குற்றம் சட்டி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com