தங்கத்தின் வர்த்தகப் பலனை குறைவின்றி பெற ஏதுவாக தங்க பத்திரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்படுகிறது. அவற்றை வாங்குவதற்காக மத்திய அரசு தற்போது அழைப்பு விடுத்திருக்கிறது.
தங்கம் மிகப்பெரிய வர்த்தகம் என்பதை தாண்டி ஆடம்பரம், அழகு, கவுரவம், கட்டாயம் என்று மாறிவிட்டது. இதனாலே இந்தியாவில் தங்கம் அதிக அளவு வாங்கி சேமிக்கப்படுகிறது. என்ன தான் தங்கம் வாழ்க்கையோடு ஒன்றி போனாலும் அதனுடைய வர்த்தக நடவடிக்கை என்பதும் பிரதானமாகவே இருக்கிறது.
குறிப்பாக ஏழை எளிய மக்கள் தங்கத்தை வாங்கி சேமிப்பில் வைத்துக் கொள்வதே ஆத்திர அவசரத்திற்கு அடகு வைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் அப்படி வாங்கி இருப்பவைத்துக் கொள்ளும் தங்கத்தினுடைய மதிப்பு செய்கூலி, சேதாரம் என்று காலம் மாற மாற குறைய தொடங்கும். இப்படி தங்கம் கையிருப்பு வைத்திருக்கக்கூடிய ஒவ்வொருவருமே செய்கூலி, சேதாரம் என்று தங்கத்தினுடைய இழப்பை வருடம் உயர உயர சந்திக்க தொடர்ந்தவர்.
இதற்கு மாற்றாக தான் இந்திய அரசு தங்கத்தில் ஏற்படும் செய்கூலி, சேதாரங்களை தடுக்கும் விதமாகவும், விலையற்றத்தை அனுபவிக்க விரும்பும் மக்களினுடைய நலனை கருதியும் தங்க பத்திரங்களை அறிமுகம் செய்தது. இந்த தங்க பத்திரங்கள் தங்கத்தினுடைய கையிருப்பை உறுதி செய்யும் ஆவணங்களாக கருதப்படுகிறது. இவை ஆவண தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதில் செய்கூலி, சேதாரம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இதனால் விலை ஏற்றம் ஏற்படும் பொழுது அதனுடைய பலன் மக்களை நேரடியாக சென்றடையும். இதனால் வர்த்தக நடவடிக்கைக்காக தங்கத்தை பயன்படுத்துபவர்கள் தங்கத்திற்கு மாற்றாக தங்க பத்திரங்களை வாங்கி சேமிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான தங்க பத்திரத்தை செப்டம்பர் 11ம் தேதி இன்று முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை மத்திய அரசு வெளியிடுகிறது. இதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. ஒரு பத்திரம் ஒரு கிராம் தங்கத்திற்கு சமமான மதிப்பு கொண்டவை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு தங்க பத்திரத்தினுடைய விலை 5,923 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வழியாக தங்க பத்திரத்தை பெறுபவர்களுக்கு 50 ரூபாய் சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் தங்க பத்திரத்திற்கு வங்கிகள் மூலமாக ஆண்டிற்கு 2.5 சதவீத வட்டியை பெற முடியும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனால் தங்க பத்திரங்களை வாங்க நிறுவனங்களும், வர்த்தகர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.