நோக்கியாவின் பரிணாமம்… மொபைல் உலகின் முன்னோடி! 

Evolution Of Nokia
Evolution Of Nokia
Published on

நோக்கியா என்ற பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது நவீன காலத்தின் தொடக்கத்தில் நம் கைகளில் இருந்த நம்பகமான மொபைல் போன்கள்தான். ஆனால், இந்த இந்த பிரபலமான நிறுவனம் மொபைல் போன்களைத் தயாரிக்கத் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு துறைகளில் தடம் பதித்திருந்தது. இந்தப் பதிவில், நோக்கியாவின் தொடக்கத்திலிருந்து மொபைல் போன் உற்பத்தியாளராக உருவெடுத்த வரலாற்றுப் பயணத்தைப் பார்க்கலாம். 

தொடக்கம்: 1865-ஆம் ஆண்டு ஃபின்லாந்தில் தொடங்கப்பட்ட நோக்கியா, ஆரம்பத்தில் ஒரு சாதாரண பேப்பர் மில் நிறுவனமாகவே இருந்தது. பின்னர் ரப்பர், கேபிள் மற்றும் மின்னணு உற்பத்தி என பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. 1960களில் தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்து, ரேடியோ கார் டெலிபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இதுவே நோக்கியாவின் தொலைத்தொடர்பு துறையில் எடுத்து வைத்த முதல் அடி.

மொபைல் உலகில் நுழைவு: 1980களில் மொபைல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், நோக்கியா இந்தத் துறையில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கியது. மொபைரா என்ற மொபைல் தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியதுடன், 1982-ஆம் ஆண்டு செனேட்டர் என்ற முதல் மொபைல் போனை வெளியிட்டது. இருப்பினும், அந்த காலகட்டத்தில் மொபைல் போன்கள் பெரும்பாலானோருக்கு எட்டாத கனவாகவே இருந்தது.

புதிய தலைமை, புதிய தொடக்கம்: 1992-ஆம் ஆண்டு ஜோர்மா ஒலில்லா என்ற புதிய தலைமையின் கீழ் நோக்கியா வந்தது. அவர் நோக்கியாவின் மொபைல் பிரிவை வளர்ப்பதில் முழு கவனம் செலுத்தினார். அதன் விளைவாக, 1992-ஆம் ஆண்டே 1011 என்ற முதல் GSM மொபைலை வெளியிட்டது நோக்கியா. இதுவே நோக்கியாவின் மொபைல் உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.

உலகளாவிய வெற்றி: 1990களின் பிற்பகுதி மற்றும் 2000களின் தொடக்கத்தில் நோக்கியா மொபைல் போன்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகின. நம்பகத்தன்மை, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் எளிமையான பயன்பாடு ஆகியவற்றால் நுகர்வோரின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. நோக்கியா 3310 போன்ற மாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் இனிப்பான 13 நன்மைகள்!
Evolution Of Nokia

வீழ்ச்சி: 2007-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன், மொபைல் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. தொடுதிரை, பயன்பாடுகள் மற்றும் நவீன இயங்குதளம் ஆகியவற்றை கொண்ட ஐபோன், நோக்கியாவின் சாதாரண மொபைல் போன்களுக்கு ஒரு கடும் போட்டியாக அமைந்தது. நோக்கியா இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தவறியதால், அதன் சந்தை பங்கு குறையத் தொடங்கியது.

நோக்கியா, ஒரு சிறிய பேப்பர் மில் நிறுவனமாகத் தொடங்கி, உலகின் மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உயர்ந்தது. ஆனால், தொழில்நுட்ப உலகில் ஏற்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தவறியதால் தனது ஆதிக்கத்தை இழந்தது. இருப்பினும், நோக்கியாவின் வரலாறு, ஒரு நிறுவனம் எப்படி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வளர்ச்சி அடைகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். நோக்கியாவின் இந்த பயணம், இன்றைய தொழில்நுட்ப உலகில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு முக்கிய பாடமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com