
சென்னையில் சொகுசு வீடுகளில் விற்பனை அதிகரித்துள்ளதாக அனுராக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடு என்பது ஒவ்வொரு குடும்பகளுடைய பிரதான கனவாக இருக்கிறது. ஏழை எளிய மக்கள் கடனை வாங்கியாவது வீடு வாங்கி விட வேண்டும் என்று தீவிர முயற்சி எடுக்கின்றனர். பிறர் தங்களுடைய மொத்த வாழ்நாள் சேமிப்பையும் முதலீடாக கொண்டு வீடு வாங்க முயற்சிக்கின்றனர். அத்தியாவசிய தேவையாக உள்ள வீட்டை சொந்தமாக வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள ஆசை அளப்பரியது.
மேலும் சிலர் வீடு வாங்க வேண்டும் என்பதை தாண்டி அதை எந்த அளவிற்கு ஆடம்பரமாக அலங்கார படுத்துவது என்றும் சிந்திக்கின்றவர்களும் உண்டு. இடத்தை வாங்கி பார்த்து வீடு கட்டி குடியேறுகின்றனர். சிலர் சொகுசு வீடுகளை தங்களுக்கு ஏற்றவாறு பார்த்து பார்த்து கட்டி கொண்டு அவற்றில் குடியேறுகின்றனர்.
இந்த நிலையில் நடப்பாண்டில் இந்தியாவின் சென்னை, மும்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட ஏழு நகரங்களில் சொகுசு வீடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாக ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனராக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் வீடுகளை வாங்க அனைத்து தரப்பு மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக சொகுசு வீடுகள் விற்பனை மிக முக்கிய ஒன்றாக மாறியிருக்கிறது. 1.5 கோடிக்கு அதிகமான விலை மதிப்பு கொண்ட சொகுசு வீடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு நடப்பு ஆண்டில் 84 ஆயிரத்து 400 சொகுசு வீடுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு 39 ஆயிரத்து 300 சொகுசு வீடுகள் விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் 9 மாதங்களில் மட்டும் 24 சதவீதம் சொகுசு வீடுகள் விற்பனை அதிகரித்திருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் ரியல் எஸ்டேட் துறை மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ரியல் எஸ்டேட் துறையின் உடைய அதி தீவிர வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது.