
உலகில் அதிக அளவில் பாதாம் பருப்புகளை உற்பத்தி செய்து முதல் நாடு என்ற இடத்தை பிடித்திருக்கிறது அமெரிக்கா.
பாதாம் பருப்பு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அதன் விலை. பாதாம் பருப்பிற்கு பெரும் தொகை ஒதுக்க வேண்டும் என்பதால் எப்பொழுதுமே பாதாம் பருப்பு கிராம் கணக்கிலான பயன்பாடை மட்டுமே கொண்டிருக்கும். பாதாம் பருப்பு இந்த அளவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் உற்பத்தி குறைவும், அதில் இருக்கக்கூடிய அளவுக்கு அதிகமான சத்துக்களுமே ஆகும்.
பாதாம் பருப்பு எந்த அளவிற்கு உடலுக்கு ஆரோக்கியமானது என்றால். உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்பை தரும், வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிரம்பியது, பிரைல்ஆண்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் இ சத்து நிரம்பியது. குழந்தைகளுக்கு அதிகமான பாதம் பருப்பு சாப்பிட வழங்குவதன் மூலம் குழந்தைகளுடைய மூளை வளர்ச்சி அதிகரிக்கும், சீரான உடல் எடை, ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இப்படி அளவுக்கு அதிகமாக நன்மையை கொண்டிருப்பதாலே பாதாம் பருப்பின் தேவையும் மக்களிடம் அதிகரிக்க காரணமாகிறது.
அதே நேரம் ஒவ்வொரு ஆண்டும் உலக சந்தையில் பாதாம் பருப்பினுடைய வர்த்தகம் பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு நடைபெறுகிறது. இதனால் பாதாமை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் அதிக அளவிலான லாபத்தை ஈட்டுகின்றன.
பாதாம் உற்பத்தி மூலம் அதிக லாபத்தை ஈட்டும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆண்டிற்கு 20 லட்சம் டன்னுக்கும் அதிகமான பாதாம் பருப்புகளை உற்பத்தி செய்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஸ்பெயின் 2,02, 339 டன் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. ஈரான் 1,47,863 டன் உற்பத்தி செய்கிறது. மொரோக்கோ 1,12, 681 டன் பாதம் பருப்புகளை உற்பத்தி செய்கிறது. அரேபிய குடியரசு 88,841 டன் பாதாம் பருப்பை உற்பத்தி செய்கிறது. துருக்கி 85,000 டன் பாதம் பருப்பை உற்பத்தி செய்கிறது. இத்தாலி 74, 584 டன் உற்பத்தி செய்கிறது. ஆஸ்திரேலியா 72, 902 டன் உற்பத்தி செய்கிறது. ஆஸ்திரேலியா 66, 095 உற்பத்தி செய்கிறது. துனிஷியா 61,000 டன் உற்பத்தி செய்கிறது. இவை பாதாம் உற்பத்தியில் முன்னணியில் உள்ள முதல் 10 நாடுகளாகவும். இந்த நாடுகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பாதாம் பருப்புகளை ஏற்றுமதி செய்கின்றன.