Real Estate Investment: நிலத்தில் முதலீடு செய்வதற்கு முன் இதத் தெரிஞ்சுக்கோங்க! 

Real Estate
Things to Consider Before Investing in Real Estate
Published on

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதென்பது இந்தியர்களின் விரும்பத்தக்க முயற்சிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியர்களிடம் பணத்தைக் கொடுத்தால், அதை வைத்து நிலம் அல்லது தங்கம் இவ்விரண்டை மட்டுமே வாங்குவார்கள். அந்த அளவுக்கு நிலம் என்பது லாபகரமான ஒன்றாக இந்தியர்களால் பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேலோட்டமான கருத்துக்களை வைத்து ரியல் எஸ்டேட் சார்ந்த விஷயங்களில் நாம் முடிவெடுக்கக் கூடாது. இந்த பதிவில் நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். 

சந்தை நிலவர ஆராய்ச்சி: ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு முன் விரிவான சந்தை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடத்துவது மிகவும் முக்கியம். குறிப்பாக நீங்கள் முதலீடு செய்யவிருக்கும் இடத்தின், சொத்து மதிப்பு, வாடகை விகிதங்கள் மற்றும் காலியிட விகிதங்களை வகுப்பாய்வு செய்ய வேண்டும். மேலும் நிலம் இருக்கும் பகுதி எப்படிப்பட்டது, அதன் எதிர்கால வளர்ச்சி போன்றவற்றைக் கண்டறிந்து முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

நிதித்திட்டம் மற்றும் பட்ஜெட்: ரியல் எஸ்டேட் முதலீட்டில் நிதித்திட்டம் மற்றும் பட்ஜெட் மிக முக்கியமானது. உங்களது சேமிப்பு, வருமானம் மற்றும் கடன் உள்ளிட்ட உங்களது நிதி நிலையை முதலில் கருத்தில் கொள்ளுங்கள். ரியல் எஸ்டேட்டில் உண்மையிலேயே உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைத் தீர்மானிக்கவும். மேலும் சொத்து வரிகள், காப்பீடு, பராமரிப்பு போன்ற கூடுதல் செலவுகளையும் கணக்கிட வேண்டும். 

முதலீட்டு யுக்தி: நீங்கள் எதுபோன்ற ரியல் எஸ்டேட்டில் முதலீடு முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யவும். குடியிருப்பு சொத்து, வணிக சொத்து அல்லது இரண்டும் சேர்ந்த கலவையில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்கவும். மேலும் வாங்கப்போகும் சொத்தைப் பயன்படுத்தி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற தெளிவுடன் முதலீடு செய்வது நல்லது. 

அபாய மதிப்பீடு: நீங்கள் செய்யும் ஒவ்வொரு முதலீடும் சில அளவிலான அபாயங்களைக் கொண்டுள்ளது. இதில் ரியல் எஸ்டேட் ஒன்றும் விதிவிலக்கல்ல. நீங்கள் வாங்கப்போகும் சொத்து தொடர்புடைய அபாயங்களை மதிப்பிடுங்கள். இடம், பொருளாதார நிலைமைகள், சந்தையின் ஏற்ற இறக்கம் போன்ற காரணிகளை கவனிக்கவும். மொத்த பணத்தையும் ஒரே இடத்தில் போடாமல், பல இடங்களில் பிரித்து சொத்து வாங்குவது உங்களது ஆபத்தை தணிக்க உதவும். 

சட்ட பரிசீலனை: ரியல் எஸ்டேட் முதலீடு சட்டம் மற்றும் வரிகளுக்கு உட்பட்டது. ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை செய்வதற்கு முன் உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் புரிந்து கொள்ளுங்கள். சொத்துரிமை, வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் வரிகள் உட்பட, சட்டம் சார்ந்த அனைத்தையும் நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது. 

இதையும் படியுங்கள்:
Inflation: உங்களை ஏழையாகவே வைத்திருக்கும் பணவீக்கம் பற்றிய உண்மைகள்!
Real Estate

விற்பனை யுக்தி: ரியல் எஸ்டேட் முதலீட்டில் அதிலிருந்து வெளியேறும் யுக்தியையும் தெரிந்திருக்க வேண்டியது முக்கியம். நீங்கள் எவ்வளவு காலம் அந்த சொத்தை வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானித்து, அதை விற்பது அல்லது வாடகைக்கு விடுதல் போன்ற உங்களுக்கு லாபம் தரும் விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் மட்டுமே ரியல் எஸ்டேட் லாபகரமான தொழிலாக இருக்கும். அல்லது நிலத்தை வாங்கி வெறுமனே வைத்திருந்தால் அதில் எந்த லாபமும் இல்லை. 

குறிப்பாக நிலம் வாங்குவதற்கு முன் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு முதலீடு செய்வது நல்லது. தேவைப்பட்டால் ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உங்களுக்கான முடிவுகளை சரியாக எடுக்கவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com