IPO
IPO

பங்குச்சந்தையில் IPO என்றால் என்ன தெரியுமா? 

Published on

பங்குச்சந்தை என்பது நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்கும் ஒரு வர்த்தக தளமாகும். இந்த பங்குச்சந்தையில் புதிய நிறுவனங்கள் நுழையவும், தங்களது வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டவும் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு முறைதான் IPO (Initial Public Offering). இது ஒரு நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக பொதுமக்களுக்கு வழங்கும் செயல்முறையாகும். 

இந்தப் பங்குகளை பொதுமக்கள் வாங்கும் போது, அவர்கள் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக மாறுகிறார்கள். இந்த நிதியை கொண்டு நிறுவனம் தனது வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம், புதிய தயாரிப்புகளை உருவாக்கலாம், கடன் சுமையை குறைக்கலாம் போன்ற பல செயல்களை மேற்கொள்ளலாம்.

பங்குச் சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை அதன் விலைக்கு ஏற்ப நீங்கள் வாங்க முடியும். ஆனால், IPO-ல் ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகளை மொத்தமாக சேர்த்து மட்டுமே உங்களால் வாங்க முடியும். இதனை ஆங்கிலத்தில் Lot என்பார்கள். தொடக்கத்தில், அந்த நிறுவனத்தின் மதிப்புகளுக்கு ஏற்ப ஒரு பங்கின் விலை நிர்ணயிக்கப்படும். பல பங்குகள் சேர்ந்த 1 Lot-இன் விலை 15 ஆயிரத்திற்கு குறைவாகவே இருக்கும். 

IPO-யின் முக்கியத்துவம்:

IPO-யின் முக்கிய நோக்கம் நிதி திரட்டுவதாகும். நிறுவனங்கள் IPO மூலம் பெரும் தொகையான நிதியைத் திரட்டி, தனது வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நிறுவனங்கள் பொதுமக்களின் பங்களிப்பை பெறலாம். இது நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

IPO மூலம் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். இதன் மூலம் நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்களால் வாங்கி விற்கப்படும். IPO வெளியிடுவதால் ஒரு நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் நிறுவனத்தின் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்படும். குறிப்பாக, நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பங்குகள் குறைந்த விலைக்கு வழங்கப்படும். இது ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
ரூ.10,000 முதலீடு போதும்: ரூ.17 இலட்சம் உங்கள் கையில்! சூப்பர் திட்டம் இதோ!
IPO

IPO-யில் முதலீடு செய்வதற்கான குறிப்புகள்:

IPO-யில் முதலீடு செய்வது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தாலும், இதில் சில ஆபத்துகளும் உள்ளன. IPO-யில் முதலீடு செய்வதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • IPO-யில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாக ஆராயுங்கள். நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள், வருவாய், செலவு, போட்டியாளர்கள் போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  •  IPO-யில் முதலீடு செய்யும் போது, நீண்ட கால முதலீடு செய்யும் மனநிலையோடு இருக்க வேண்டும்.

  • இதில் முதலீடு செய்வதற்கு முன், வல்லுநர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. நீங்களாகவே, எதைப் பற்றியும் தெரியாமல் சூதாட்டம் போல இதைப் பயன்படுத்தாதீர்கள். 

முதலீட்டாளர்கள் IPO மூலம் புதிய நிறுவனங்களில் முதலீடு செய்து, அதிக வருமானம் ஈட்டலாம். இருப்பினும், IPO-யில் முதலீடு செய்வதில் சில ஆபத்துகளும் உள்ளன. எனவே, IPO-யில் முதலீடு செய்வதற்கு முன், கவனமாக ஆராய்ந்து, வல்லுநர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com