Micro Marketing என்றால் என்ன தெரியுமா? 

Micro Marketing.
Micro Marketing.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நுகர்வோர் தொடர்ந்து விளம்பரங்கள் மற்றும் செய்திகளின் மூலம் டார்கெட் செய்யப்படுகின்றனர். இவற்றுக்கு மத்தியில் வணிகங்கள் தங்களின் ப்ராடக்டுகளை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல புதுமையான வழிகளைக் கண்டுபிடிப்பது மிக முக்கியம். இத்தகைய சூழலில் சந்தைபடுத்துதலில் ஒரு தனித்துவமான அணுகுமுறையே மைக்ரோ மார்க்கெட்டிங். இந்த பதிவில் மைக்ரோ மார்க்கெட்டிங் மற்றும் அதன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். 

மைக்ரோ மார்க்கெட்டிங் என்றால் என்ன? 

மைக்ரோ மார்க்கெட்டிங் என்பது ஒரு குறிப்பிட்ட முக்கியமான துறை அல்லது பெரிய துறையில் உள்ள சிறிய பிரிவுகளை குறிவைத்து, அதில் மட்டும் கவனம் செலுத்தி சந்தைப்படுத்தும் உக்தியாகும். இந்த மைக்ரோ மார்க்கெட்டிங்கானது, அந்த சிறிய பிரிவுகளின் தேவைகள், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் குணாதிசயங்களை பூர்த்தி செய்ய சந்தைப்படுத்தும் முயற்சிகளை உள்ளடக்கியது. எல்லா நுகர்வோருக்கும் ஒரு பொருளை சந்தை படுத்தாமல், எந்த நுகர்வோருக்கு என்ன பொருள் தேவையோ அதை மட்டும் அவர்களுக்கு சந்தைப்படுத்துவதே மைக்ரோ மார்க்கெட்டிங். 

மைக்ரோ மார்க்கெட்டிங் நன்மைகள்: 

  1. மைக்ரோ மார்க்கெட்டிங் வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்வம், பிரச்சனை மற்றும் விருப்பங்களை நேரடியாக பேசி ஒரு அர்த்தமுள்ள தொடர்பை உருவாக்க அனுமதிக்கிறது. அதாவது யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கானதை இந்த முறையில் செய்து கொடுக்கலாம்.

  2. ஒரு பொருளை தேவையான நபர்களிடம் நாம் கொண்டு செல்வதால், அதில் உள்ள கன்வெர்ஷன் ரேட் அதிகம். அதாவது நாம் விளம்பரப்படுத்தும் பொருட்களை வாங்குவோரின் விகிதம் அதிகமாகும்.

  3. இந்த முறை பார்ப்பதற்கு எதிர்மறையானதாகத் தோன்றினாலும் இதில் ஆகும் செலவுகள் குறைவு. சில பிரிவுகளை துல்லியமாகக் குறிவைத்து சந்தைப்படுத்துவது மூலமாக, ஆர்வம் இல்லாத பல பார்வையாளர்களைத் தவிர்க்க முடிகிறது. 

  4. மைக்ரோ மார்க்கெட்டிங் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்டு அவர்களுக்கேற்ற அனுபவங்களை வழங்கும்போது நுகர்வோருக்கு விசுவாசம் ஏற்பட்டு மீண்டும் அந்த வணிகத்தை நோக்கி செல்வதற்கு ஊக்குவிக்கிறது. 

இதையும் படியுங்கள்:
இருளைப் பார்த்தால் பயப்படும் நபரா நீங்கள்? இதோ உங்களுக்கான தீர்வு! 
Micro Marketing.

இப்படி மிகவும் வித்தியாசமான முறையில் பிறருக்கு என்ன தேவை என்பதை சரியாக புரிந்து கொண்டு, மார்க்கெட்டிங் தந்திரத்தை பயன்படுத்தும்போது வணிகங்கள் சிறப்பாக வளர உதவும். ஆனால் இந்த தந்திரத்தைப் பின்பற்றுவதற்கு முன்பாக பல கிரவுண்ட் அனாலிசிஸ் செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல் உங்களது நேரமும் பணமும் வீணாகலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com