பங்குச் சந்தைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன சம்பந்தம்?

பங்குச் சந்தைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன சம்பந்தம்?

ல்பர்ட் ஐன்ஸ்டீனைத் தெரியுமா? கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஐன்ஸ்டீன். மாபெரும் மேதை. அவரைப் பற்றி ஒரு கதை சொல்வதுண்டு.

ஐன்ஸ்டீன் தன் மறைவுக்குப் பின்னர் சொர்க்கத்துக்குப் போனார். நம்மூர் அரசியல் தலைவர்ளுக்கு அளிக்கப்படுவதைப் போல, சொர்க்கத்தில் ஐன்ஸ்டீனுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு. இந்த தடபுடல் எல்லாம் ஓய்ந்த பிறகு, ஆண்டவனின் அசிஸ்டென்ட் ஒருவர் ஐன்ஸ்டீனை மெல்ல நெருங்கினார்.

''ஐயா, கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கணும்... உங்களுக்காக ஒரு பிரம்மாண்டமான மாளிகை தயாராகி வருகிறது. அதுல இன்னும் கொஞ்சம் வேலைகள் பாக்கி இருக்கறதால, சிரமத்தைப் பொறுத்துக்கிட்டு, கொஞ்ச நேரம் இந்த ஹால்ல தங்கி இருக்கணும்" என்று தயக்கத்துடன் சொன்னார் ஆண்டவனின் அசிஸ்டென்ட்

"நோ பிராப்ளம்... ஆனா, எப்படிப் பொழுதைப் போக்கறது? இங்க இருக்கறவங்களை எல்லாம் கொஞ்சம் அறிமுகம் செஞ்சு வச்சீங்கன்னா, அவங்களோட பேசி, பொழுதைப் போக்கிடுவேன்" என்றார் ஐன்ஸ்டீன்.

உடனே, அங்கிருந்த நாலைந்து பேரையும் ஆண்டவனின் அசிஸ்டென்ட் அருகில் அழைத்தார். முதலாமவரைக் காட்டி, ஐன்ஸ்டீனிடம் அசிஸ்டென்ட் சொன்னார்.

''இவர் ரொம்ப புத்திசாலி. இவரது ஐ.க்யூ. 180-க்கு மேலே."

"ஒ... வெரி குட்! கணக்கு பத்தி இவரோட நான் டிஸ்கஸ் பண்ணலாம்!"

"இரண்டாவதா இருக்கறவரும் புத்திசாலிதான்... அவரது ஐ.க்யூ. 160."

''பரவாயில்லை... குவாண்டம் தியரி, பிரபஞ்சம்னு பிசிக்ஸ் பத்தி இவரோட பேசலாம்" என்றார் ஐன்ஸ்டீன்.

மூன்றாவது நபரைக் காட்டி, "இவரது ஐ.க்யூ- 140" என்றார் அசிஸ்டென்ட்.

இலக்கியம், கலை, சினிமான்னு இவரோட பேச நிறைய விஷயம் இருக்கே!" என்று உற்சாகமானார் ஐன்ஸ்டீன்.

"அடுத்து, நாலாவதா இருக்காரே... அவரோட ஐ.க்யூ. 100 அல்லது 105தான் இருக்கும்.'

"நாட்டு நடப்பு, அரசியல், அடுத்து வரப்போற தேர்தல்னு இவரோடவும் நிறையப் பேசலாமே."

கடைசியாக இருந்தவரை அருகில் அழைத்த ஆண்டவனின் அசிஸ்டென்ட், இங்கே இருக்கறதுலயே இவரோட ஐ.க்யூ.தான் ரொம்பக் குறைச்சல்... 60 கூட தேறாது" என்று தயக்கத்துடன் சொன்னார்.

"ஹாஹாஹா" என்று உற்சாகமாகச் சிரித்த ஐன்ஸ்டீன், அந்த ஐந்தாவது ஆளின் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு, "யெஸ், டெல் மீ மேன்... பங்குச் சந்தைகள் எல்லாம் எப்படி இருக்கு? இந்த வருஷத்துல ஏறுமா. இறங்குமா?" என்று பேசத் தொடங்கினார்.

புரிகிறதா? பங்குச் சந்தைகளைத் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள அதிபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சொல்லப் போனால், புத்திசாலித்தனத்துக்கும் பங்குச் சந்தைகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டால், நீங்களும் பங்கு வர்த்தகத்தில் மேதையாகிவிடலாம். அதற்குத் தேவைப்படுவதெல்லாம் கொஞ்சம் ஆர்வம், கொஞ்சம் முயற்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com