Systematic Withdrawal Plan (SWP) என்றால் என்ன? 

Systematic Withdrawal Plan
Systematic Withdrawal Plan (SWP)
Published on

நீண்ட காலமாக முதலீடு செய்த பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது பலரின் மனதில் எழும் கேள்வி. குறிப்பாக, ஓய்வு காலத்திற்குப் பிறகு வருமானம் தேவைப்படும்போது முதலீட்டில் இருந்து தொடர்ந்து வருமானம் பெறும் வழிமுறைகள் தேவைப்படுகிறது. இதற்கு ஒரு சிறந்த வழி Systematic Withdrawal Plan (SWP) ஆகும். SIP போலவே இதுவும் ஒரு முதலீட்டுக் கருவி. இதன் மூலம் ஒருவர் தனது முதலீட்டு கணக்கிலிருந்து, தனக்குத் தேவையான தொகையை, தனது வசதிக்கேற்ப தொடர்ந்து மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். 

SWP எவ்வாறு செயல்படுகிறது? 

SWP-ஐ ஒரு ATM மெஷின் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ATM மிஷினில் இருந்து எப்போது எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்வது போல, SWP-யிலும் நீங்கள் எவ்வளவு தொகையை, எவ்வளவு அடிக்கடி எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால். அடுத்த 20 ஆண்டுகள் கழித்து, வளர்ந்திருக்கும் பணத்தை மாதம் பத்தாயிரம் நீங்கள் எடுக்கிறீர்கள் என்றாலும், மீதம் இருக்கும் தொகைக்கு உங்களுக்கு வட்டி தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். 

இதன் மூலமாக உங்களது செலவுகளையும் பார்த்துக் கொள்ளலாம், பணத்தையும் பன்மடங்கு பெருக்கலாம். இது ஒரு திட்டமிடப்பட்ட வருமானத்தை உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் எவ்வளவு தொகையை எப்போது எடுக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். SWP-யின் மூலம் பெறப்படும் வருமானம் நீண்ட கால மூலதன லாபமாகக் கருதப்படுகிறது. இதனால், நீங்கள் குறைந்த வருமான வரியை செலுத்த வேண்டி இருக்கும். 

இந்த முதலீட்டு முறையை முற்றிலுமாக நீங்கள் தானியங்கிப் படுத்த முடியும். ஒருமுறை ஆக்டிவேட் செய்துவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பணப் பரிமாற்றம் நடக்கும். இந்த செயல்முறை பணவீக்கத்தை முறியடிக்கும் என்பதால், ஒரு சிறந்த முதலீடாகப் பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
Wilson's Law: அறிவை வளர்த்துக்கொள், பணம் தானாக வரும்!
Systematic Withdrawal Plan

பாதகங்கள்: நீங்கள் அதிக பணம் முதலீடு செய்தால் மட்டுமே இது உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். 20 ஆண்டுகள் கழித்து நீங்கள் எடுக்கும் சிறிய தொகையானது பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருக்கும். சந்தை நன்றாக செயல்படாவிட்டால், நீங்கள் எடுக்கும் தொகை உங்கள் முதலீட்டின் மதிப்பை விட அதிகமாக இருக்கலாம். இதனால், நீங்கள் வருவாயை இழக்க நேரிடும். 

நீங்கள் எடுக்கும் தொகை உங்கள் மற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என சொல்ல முடியாது. இவை அனைத்தும் சந்தையின் அப்போதைய நிலையைப பொறுத்து மாறுபடும். எனவே, இந்தத் திட்டத்தை ஓய்வு காலத்திற்குப் பிந்தைய வருமானமாகவே பார்க்க வேண்டும். 

உங்களுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விருப்பம் இருந்தால், மேலும் பல விஷயங்களை அலசி ஆராய்ந்து, முழுமையாக புரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். இந்தப் பதிவில் SWP திட்டம் சார்ந்த மேலோட்டமான தகவல்களை மட்டுமே நான் பகிர்ந்து கொண்டேன். எனவே, இந்தப் பதிவின் அடிப்படையில் எந்த முதலீட்டையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com