Saving A/C, Current A/C இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

Saving A/C, Current A/C
Saving A/C, Current A/C

ங்கியில் இரண்டு விதமான கணக்குகள் உள்ளன. Current Account = நடப்பு கணக்கு Savings Account = சேமிப்பு கணக்கு இவற்றின் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

நடப்புக் கணக்கு: அடிக்கடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக இருக்கவேண்டும். சேமிப்புக் கணக்கு: பணத்தினை சேமிக்கவும், அவசர காலத்தில் உதவவும், பணத்தினை பெருக்குவதற்கும் ஏதுவாக இருக்கவேண்டும்.

பொதுவாக பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் நடப்புக் கணக்கு (Current Account) வைத்திருப்பார்கள். அதேபோல், சொந்தத் தொழில், வர்த்தக நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்ற அமைப்புகள் சேமிப்புக் கணக்கு (Savings Account) வைத்திருப்பார்கள்.

பொதுவாக மாதாந்திர சம்பளம் வாங்கும் தனிநபர்கள் மாதாந்திர குறைந்தபட்ச பணத்தின் அளவாக நடப்புக் கணக்கை மெயின்டன் செய்வார்கள். இந்த நடப்புக்கணத்தில் ரூபாய் 10,000 ஆயிரத் முதல் சில லட்சங்கள் வரை இருக்கலாம்.

சேமிப்புக் கணக்கு இது குறைவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை சேமிப்புக் கணக்கு போன்ற சில வகை கணக்குகளில், சில சமயங்களில் சுழியமாக கூட இருக்க வாய்ப்பு உண்டு. சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தங்களுடைய கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்ப வட்டி கிடைக்கும். நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி கிடைக்காது. (இத்தகைய கணக்குகளில் அதிகமாக பரிவர்த்தனை நிகழ்வதால், இதில் வங்கிகளுக்கு பணத்தின் நீர்ப்புத் தன்மையால், வங்கிகளால் பணத்தை பெருக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், இதில் வட்டி கிடையாது) 

சேமிப்புக் கணக்கு வட்டியானது 3% முதல் 6% வரை கூட இருக்கலாம். பணத்தைப் பெருக்கும் வாய்ப்பு உண்டு.வரி விலக்கு உண்டு. நடப்புக் கணக்கில் வட்டி இல்லாதபடியால், பணப் பெருக்கம் இல்லாதபடியால், வரி என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.

சேமிப்புக் கணக்கு இங்கு 10,000 வரை வரி விலக்கு உண்டு. அரசாங்கமானது மக்களின் சேமிப்புகளை ஊக்குவிப்பதற்காக வரி விலக்கு (80TTA படி) அளிக்கிறது. பணப் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் உண்டு. நடப்புக் கணக்கு பொதுவாக பண பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. இவை நிறுவனங்களின் அதிக பண வர்த்தனைகளுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.

சேமிப்புக் கணக்கு பண பரிவர்த்தனைகளுக்கு அளவு விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மாதம் 5 முறை பணத்தை எடுக்கலாம்.

நடப்புக் கணக்கு; இதில் அதிக பணவர்த்தனை நிகழ்வதற்கு ஏற்றவாறு அதிக காசோலைகள் , அதிக காசோலைகள் பண பரிமாற்றம், அதிக முறையில் பணத்தினை எடுப்பது போன்ற சலுகைகள் உள்ளன.சேமிப்புக் கணக்கு; இதில் குறைந்த காசோலைகள், குறைந்த காசோலைகள் பணப் பரிமாற்றம், குறைந்த தடவை பணம் எடுப்பது போன்றவை மூலம், பண பரிவர்த்தனை கட்டுப்படுத்தப்படுகிறது.

அதிக பண வர்த்தனை தேவை என்றால், வங்கிகள் நடப்பு கணக்குக்கு மாறுமாறு கேட்டுக் கொள்வார்கள் அல்லது அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். வங்கி மிகை எடுப்பு (overdraft): நடப்புக் கணக்கு; மிகை எடுப்பானது வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் மறுபடி பணமானது நிரப்பப்பட வேண்டும். சேமிப்புக் கணக்கு மிகை எடுப்பானது வங்கிகளால் ஏற்றக் கொள்ளப்பட மாட்டாது. மாதாந்திர சம்பளம் வாங்கும் மக்களுக்கு பணத்தினை மாதாந்திர தேவைக்கும், அவசர கால நிதிக்கும் வைத்திருப்பதற்கு சேமிப்பு கணக்கானது உதவுகிறது. மேலும், சேமிப்பு கணக்கானது, பணத்தினை வளருவதற்கும் உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்தின் வரி விலக்கானது ரூபாய். 10,000 வரை கிடைக்கிறது. எனவே, அடிக்கடி பணம் எடுக்கும் தேவை இல்லையென்றால், சேமிப்பு கணக்கில் பணமானது சேமிப்பது மட்டுமன்றி, முதலீடாகவும் இருந்து, பணம் பெருகுகிறது. மற்றபடி தொழிலதிபர்களுக்கு நடப்பு கணக்கு சரியானது. சேமிப்பு கணக்கினை பயன்படுத்தி, பணத்தினைப் பெருக்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com