
தொலைந்து போன உங்கள் மொபைல் போன் குற்றவாளிகளிடம் சிக்கினால், பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு உங்களுடைய சிம் கார்டைப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்படுவது முற்றிலும் நீங்கள்தான். ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் இன்றைய நிலையில், மொபைல் போனைத் தொலைப்பதால் நம்முடைய வங்கியில் இருக்கும் பணம் பறிபோகவும் வாய்ப்புள்ளது. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொடர்பு எண் மொபைல் போனில் இருப்பதால், அது நமக்கு தான் ஆபத்தை ஏற்படுத்தும்.
மொபைல் போன் தெலைந்த உடனே, வங்கி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்க வேண்டும். அதோடு மொபைலில் இருக்கும் யுபிஐ செயலி, மொபைல் வாலட் மற்றும் மொபைல் பேங்கிங் செயலி ஆகியவற்றை செயல்படாதவாறு தற்சமயத்திற்கு முடக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, உங்கள் சிம் கார்டை முடக்க வேண்டும்.
மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் பரிவர்த்தனைகள் நிகழ்கிறதா என்பதை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுதவிர காவல் துறையில் மொபைல் போன் தொலைந்தது தொடர்பாக ஒரு புகார் அளித்து விடுங்கள். அதே எண்ணில் புதிய சிம் கார்டு வாங்கும் வரை அனைத்தையும் முடக்கி வைப்பது நல்லது.
மத்திய அரசின் CEIR (Central Equipment Identity Register) https://www.ceir.gov.in/ இணையதளமும் தொலைந்து போன மொபைல் போன்களை கண்டறிய உதவுகிறது. இந்த இணையதளத்தில் மொபைல் தொடர்பான விவரங்களை பதிவு செய்தால், உடனடியாக போன் பிளாக் செய்யப்பட்டு, கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கும். ஒருவேளை மொபைல் போன் மீண்டும் கிடைக்கும் பட்சத்தில், அன்பிளாக் செய்யவும் முடியும்.
மின்னஞ்சல் மற்றும் மொபைல் பேங்கிங் உள்பட அனைத்திற்குமான கடவுச்சொல்லை உடனே மாற்றி விட வேண்டும். மொபைல் நம் கையில் இருக்கும் போதே பல மோசடிகள் நடக்கின்றன. இந்நிலையில் மொபைல் போன் தொலைந்து விட்டால், சொல்லவே வேண்டாம். ஆன்லைனில் பணத்தைத் திருடும் மோசடி கும்பலுக்கு இது நல்வாய்ப்பாக அமைந்து விடும். ஆகையால் உங்கள் மொபைல் போனை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சிம் கார்டு அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஆதார் கார்டு தொடங்கி வங்கிக் கணக்கு வரை சிம் கார்டு எண்ணை இணைக்க வேண்டியதும் கட்டாயம். சிம் கார்டை இணைத்தால் தான், எந்தச் சேவையையும் நம்மால் எளிதாக அணுக முடியும். இந்நிலையில் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட சிம் கார்டை வாடிக்கையாளர்கள் தொலைத்து விட்டால், உடனே அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
இன்று பெரும்பாலும் அனைவரது கையிலும் ஒரு மொபைல் போன் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மைப் பற்றிய அனைத்துத் தகவல்களும், வங்கிக் கணக்கு விவரங்களும் இதில் தான் அடங்கியுள்ளன. அப்படிப்பட்ட மொபைல் போன் காணாமல் போகும் போது, சிம் கார்டையும் நாம் இழக்க நேரிடும். இதில் நாம் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஏனெனில் சிம் கார்டுடன் இணைக்கப்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைக்கான யுபிஐ செயலிகள் மொபைலில் தான் இருக்கின்றன.
தொலைந்து போன உங்கள் சிம் கார்டு குற்றவாளிகளிடம் சிக்கினால், பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்படுவது முற்றிலும் நீங்கள் தான். ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் இன்றைய நிலையில், சிம் கார்டைத் தொலைப்பதால் நம்முடைய வங்கியில் இருக்கும் பணம் பறிபோகவும் வாய்ப்புள்ளது. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு மொபைல் போனில் இருப்பதால், அது தொலையும் போது நமக்கு தான் ஆபத்தை ஏற்படுத்தும்.
சிம் கார்டு தெலைந்த உடனே, வங்கி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்க வேண்டும். அதோடு சிம் கார்டுடன் இணைக்கப்பட்ட யுபிஐ செயலி, மொபைல் வாலட் மற்றும் மொபைல் பேங்கிங் செயலி ஆகியவற்றை செயல்படாதவாறு தற்சமயத்திற்கு முடக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, உங்கள் சிம் கார்டை முடக்க வேண்டும். மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் பரிவர்த்தனைகள் நிகழ்கிறதா என்பதை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இதுதவிர காவல் துறையில் சிம் கார்டு தொலைந்தது தொடர்பாக ஒரு புகார் அளித்து விடுங்கள். அதே எண்ணில் புதிய சிம் கார்டு வாங்கும் வரை அனைத்தையும் முடக்கி வைப்பது நல்லது.
மத்திய அரசின் CEIR (Central Equipment Identity Register) https://www.ceir.gov.in/ இணையதளமும் தொலைந்து போன மொபைல் போன் மற்றும் சிம் கார்டுகளைக் கண்டறிய உதவுகிறது. இந்த இணையதளத்தில் மொபைல் மற்றும் சிம் கார்டு தொடர்பான விவரங்களை பதிவு செய்தால், உடனடியாக பிளாக் செய்யப்பட்டு, கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கும். ஒருவேளை சிம் கார்டு மீண்டும் கிடைக்கும் பட்சத்தில், அன்பிளாக் செய்யவும் முடியும்.
மின்னஞ்சல் மற்றும் மொபைல் பேங்கிங் உள்பட அனைத்திற்குமான கடவுச்சொல்லை சிம் கார்டு தொலைந்த உடனே மாற்றி விட வேண்டும். சிம் கார்டு நம் கையில் இருக்கும் போதே பல மோசடிகள் நடக்கின்றன. இந்நிலையில் அது தொலைந்து விட்டால், சொல்லவே வேண்டாம். ஆன்லைனில் பணத்தைத் திருடும் மோசடி கும்பலுக்கு இது நல்வாய்ப்பாக அமைந்து விடும். ஆகையால் உங்கள் சிம் கார்டை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.