வரி விதிப்புக்கேற்ப எந்த தங்க முதலீடு சிறந்தது?

Tax on Gold
Gold Investment
Published on

பொருளாதார சந்தையில் தங்க முதலீட்டுக்கு என்றுமே மவுசு அதிகம். நாளுக்கு நாள் தங்கத்தின் விலையேறுவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஏராளமாக உள்ளனர். இருப்பினும் வரி விதிப்பையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள் இருந்தாலும், வரி விதிப்பைப் பொறுத்து எந்த தங்க முதலீடு சிறந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

இந்தியாவில் நடுத்தர மக்கள் தாங்கள் வாங்கும் தங்க ஆபரணங்களை பெரும்பாலும் விற்பனை செய்வதில்லை. அவசரத் தேவைக்கு மட்டுமே சிலர் விற்கின்றனர். ஆனால் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், தங்கத்தின் விலை ஏறும் போது விற்பனை செய்வது வழக்கம். இது ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டமாக பார்க்கப்பட்டாலும், இதில் கிடைக்கும் லாபம் வருவான அளவைக் கடக்கும் போது வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். அதோடு இதில் இன்டக்சேஷன் வாய்ப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு சொத்து அல்லது முதலீட்டின் கொள்முதல் விலையை, தற்போதைய விலைக்கு கொண்டு வருவதை இன்டக்சேஷன் என்போம். இது பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும்.

தங்கத்தை ஆபரணமாக வாங்கி விற்கும் போது 2 விதமான வரிவிதிப்பு முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆபரணத்தை வாங்கிய தேதியில் இருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விற்றால், அதில் கிடைக்கும் இலாபம் உங்கள் வருமானத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட்டு, வருமான அடுக்கிற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். ஒருவேளை 2 ஆண்டுகளுக்குப் பிறகு விற்றால், இன்டக்சேஷன் வாய்ப்பு மறுக்கப்படும். அதோடு வாங்கிய விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையே இருக்கும் இலாபத் தொகைக்கு 12.5% வரி விதிக்கப்படும்.

தங்கத்தை மியூச்சுவல் ஃபண்ட் முறையில் முதலீடு செய்தாலும் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது. இருப்பினும் ஏப்ரல் 2023-க்கு முன்பாக தங்க மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை வாங்கியிருந்தால், அவர்களுக்கு இன்டக்சேஷன் வாய்ப்பு கிடைக்கும்.

தங்கத்தை இ.டி.எப். முறையில் முதலீடு செய்தால், ஒரு ஆண்டுக்குள் விற்பனை செய்து விட வேண்டும். இதில் கிடைக்கும் இலாபம் வருமானத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட்டு, வருமான அடுக்கிற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். ஓராண்டுக்கு மேல் தங்க இ.டி.எப்-ஐ விற்பனை செய்தால் 12.5% வரி கட்ட வேண்டும்.

தங்கப் பத்திர முதலீட்டிற்கும் இதே முறையில் தான் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் தங்கப் பத்திரத்தை விற்பனை செய்யாமல் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரீடீம் (Redeem) செய்து கொண்டாலோ அல்லது முதிர்வு காலம் வரை வைத்திருந்து பின்னர் கொடுத்தாலோ அதிக இலாபம் கிடைக்கும். குறிப்பாக இந்த இலாபம் முழுமைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.

வரி விதிப்பைப் பொறுத்து பார்க்கையில் தங்கப் பத்திர முதலீடு தான் மிகவும் சிறந்தது. ஆனால் இதில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் தங்கப் பத்திரத்தின் அடுத்த தவணைகளை வெளியிடாமல் நிறுத்தி விட்டது. இதனால் தான் சந்தையில் இதனை யாரேனும் விற்றால் டிமாண்ட் ஏறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com