ஏன் சீனாவைப் போல இந்தியா வளர்ச்சி அடையவில்லை தெரியுமா? 

India Vs China
India Vs China
Published on

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகவும், பண்டைய நாகரிகங்களைக் கொண்ட நாடுகளாகவும் விளங்குகின்றன.‌ இரு நாடுகளும் ஒரே காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற போதிலும், பொருளாதார வளர்ச்சியில் சீனா இந்தியாவை விட முன்னேறி உள்ளது. இதனால், இந்தியா ஏன் சீனாவைப் போல வளர்ச்சி அடையவில்லை என்ற கேள்வி பல ஆண்டுகளாக விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. 

இந்தப் பதிவில் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளுக்கான முக்கிய காரணங்களை ஆழமாக ஆராய்வோம்.‌‌ 

வரலாற்றுப் பின்னணி: இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தங்கள் சொந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா நீண்ட காலம் இருந்ததால், அதன் பொருளாதாரம் முதன்மையாக வேளாண்மையைச் சார்ந்திருந்தது. அதேசமயம், சீனா பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மக்கள் குடியரசாக அறிவிக்கப்பட்டது. சீனா தனது பொருளாதாரத்தை மறுபடிவமைக்கவும், தொழில்மயமாதலை ஊக்குவிக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. 

அரசியல்: இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடு. ஆனால், சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, முடிவு எடுக்கும் செயல்முறையை மெதுவாக்கி பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதை சிக்கலாக்கியது. அதே சமயம் சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சி விரைவான மற்றும் தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்ய உதவியது. 

பொருளாதாரக் கொள்கைகள்: இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின் பொருளாதாரக் கொள்கையும் முற்றிலும் மாறுபட்டவை. இந்தியா தாராளமாயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்ற சீர்திருத்தங்களை மெதுவாகவும் பட்டங்களாகவும் செயல்படுத்தியது. ஆனால் சீனா, 1978 ஆம் ஆண்டு தொடங்கி திறந்த பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி, வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்து, ஏற்றுமதியை அதிகரித்தது.‌ இதனால், சீனாவின் பொருளாதாரம் கிடுகிடுவென உயர்ந்தது. 

இதையும் படியுங்கள்:
உங்கள் கனவை அடைய ஊக்கப்படுத்தும் 5 பொருளாதார வாசகங்கள்!
India Vs China

இந்தியாவின் சமூகக் கட்டமைப்பு சீனாவை விட மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்தது. இதனால், சமூக சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஊழல் போன்ற பிரச்சனைகள் இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. சீனாவில் அரசாங்கம் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி, பொருளாதார வளர்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்பதை உறுதி செய்தது.‌ மேலும், சீனா தனது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியது. சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் சீனா தனது பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தியது. இந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சி மிகவும் மெதுவாக இருந்தது. 

இப்படி பல காரணங்களை இந்தியா ஏன் சீனாவைப் போல வளர்ச்சி அடையவில்லை என்பதற்கு பதிலாகக் கூறலாம். இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை புனிதப் படுத்த வேண்டும் என்றால் அரசாங்கம் தனியார்துறை மற்றும் சமூகம் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தல், ஊழலை ஒழித்தல், சமூக சமத்துவத்தை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com