ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியால் காஸ்ட்லி சிட்டியாக மாறிய அகமதாபாத்!

Icc Final Match Ahmedabad
Icc Final Match Ahmedabad

லகக் கோப்பை இறுதி போட்டி காண குஜராத் மாநிலம் அகமதாபாத்தை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருப்பதால் அப்பகுதியில் வர்த்தகம் அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகின் பெரும் பகுதி மக்கள் ஃபுட்பாலை நோக்கி தங்களுடைய கவனத்தை செலுத்தி கொண்டு இருந்தாலும் இந்தியா கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டு இருப்பதை தற்போதைய உலகக் கோப்பை போட்டியும் நிரூபித்துக் காட்டி இருக்கிறது.

எவ்வளவு செலவு செய்தாலும் பரவாயில்லை உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காண வேண்டும் என்ற நோக்கில் இந்தியா முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது ஒரு நாள் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

மும்பையில் நடைபெற்ற முடிந்த அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா, வரக்கூடிய நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. இந்த இறுதிப் போட்டியை காண இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் அகமதாபாத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற இருப்பதால் குஜராத்தினுடைய தொழில் நிறுவனங்களினுடைய சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது. இது மட்டுமல்லாது அகமதாபாத் நகரத்தில் அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனாலும் வியாபாரிகள், வர்த்தகர்கள் பெருமளவில் லாபம் ஈட்டி வருகின்றனர்.

அகமதாபாத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள், 5 ஸ்டார் ஹோட்டல்களினுடைய ஒரு நாள் அறையினுடைய மதிப்பு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் விமான டிக்கெட் 100 மடங்கு விலை உயர்வை கண்டிருக்கிறது. உணவகங்களிலும் உணவுப் பொருட்களினுடைய விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்திற்கு ஏராளமான வாகனங்கள் படை எடுக்க கூடும் என்பதால் அகமதாபாத் நகரம் சுற்றிலும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அகமதாபாத்தில் பட்டாசு கடைகளினுடைய எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கேக்குகளின் ஆர்டர் பேக்கரிகளில் குவிந்த வண்ணம் இருப்பதாக அகமதாபாத் வர்த்தக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அகமதாபாத் நகரமும் விழாக்கோலம் கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com