
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அதிகளவில் உற்பத்தி செய்து சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றன. இதில், ஒன்றான ஜீலோ எலெக்ட்ரிக் (Zelio Electric)நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். குறிப்பாக, இந்நிறுவனம் மலிவு விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் ஜீலோ எலெக்ட்ரிக் நிறுவனம், புதிய ஜெலோ நைட் பிளஸ் என்ற மின்சார ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டர், 100 கிமீ ரேஞ்ச், நீக்கக்கூடிய பேட்டரி மற்றும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது இதில் நீக்கக்கூடிய 1.8 கிலோ வாட் ஹவர் எல்.எப்.பி. பேட்டரி இடம் பெற்றுள்ளது.
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதை தனியாக கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 100 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம் என்று ஜெலோ எலெக்ட்ரிக் நிறுவனம் கூறியுள்ளது. இதன் 1.5 கிலோ வாட் மோட்டார் மணிக்கு 55 கிமீ வேகத்தில் மென்மையான சவாரிகளை உறுதி செய்கிறது, இது பரபரப்பான நகர சாலைகள் மற்றும் கிராமப்புற பாதைகளில் செல்ல ஏற்றது.
நைட் பிளஸின் மாதாந்திர சார்ஜிங் செலவு ரூ.179 ஆகும். இந்த செலவு வாகனத்தை 6.5/யூனிட் மின்சாரம் என்ற விகிதத்தில் சார்ஜ் செய்து, தினசரி 50 கிலோமீட்டர் வரை வாகனத்தை ஓட்டி கணக்கிடப்பட்டுள்ளது.
புதிய ஜெலோ நைட் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்திய ரைடர்களுக்கு ஏற்றவாறு ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், பாலோ-மி-ஹோம் ஹெட் லாம்ப்கள், யு.எஸ்.பி. சார்ஜ் உள்ளிட்ட பல அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது ஆறு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.
இதில், 2 கலர் ஆப்ஷன்கள், சிங்கிள் டோன். எஞ்சிய 4 கலர் ஆப்ஷன்களில், ட்யூயல் டோன்கள். சிங்கிள் டோன் - கிளோஸி ஒயிட் மற்றும் கிளோஸி பிளாக் ஆகும்.
ட்யூயல் டோன் (Dual-tone) : மேட் நீலம் & வெள்ளை, மேட் சிவப்பு & வெள்ளை, மேட் மஞ்சள் & வெள்ளை, மேட் சாம்பல் & வெள்ளை போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.
ஜீலோ எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நைட் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மிகவும் குறைவானதாகும். நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜெலோ நைட் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஷோரூம் விலை சுமார் ரூ.59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் இப்போது அனைத்து Zelo Electric டீலர்ஷிப்களிலும் திறக்கப்பட்டுள்ளன, டெலிவரிகள் ஆகஸ்ட் 20-ம்தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகள் நிரம்பிய ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிகவும் குறைவான விலையில் வாங்க வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜெலோ நைட் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் சிறப்பான தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.