0,00 INR

No products in the cart.

கேப்டன் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு!

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை விமானி கேப்டன் அபிநந்தனுக்கு இன்றுவீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விருதை அபிநந்தனுக்கு வழங்கி கவுரவித்தார்

தமிழகத்தைச் சேர்ந்தவர் அபிநந்தன். இவர் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக செயலாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுரவி தீவிரவாத முகாம்களை தகர்த்தன. அதையடுத்து அதே ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி அன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை போர் விமானியான அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார். இத்தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்து, அபிநந்தன் உயிர் பிழைத்தார். ஆனால் பாகிஸ்தானில் அபிநந்தன் கைதுசெய்யப்பட்டார். பின்னர், இந்திய அரசும் உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார்..

இதனையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு அவரது வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ராணுவ கமாண்டராக இருந்த அவருக்கு குழு கேப்டனாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.


இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், அபிநந்தனுக்குவீர் சக்ரா விருதுவழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை முறியடிக்கும் பணீயில் தன்னுயிரை இழந்த ராணுவ வீரர்களுக்கும் கீர்த்தி சக்ரா‘ (மரணத்திற்குப் பின்), ’சௌர்ய சக்ரா‘ (மரணத்திற்குப் பின்) விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

yoga day

எல்லாம் தரும் வரம் யோகா

0
இந்தியாவின் மிக அறிய பொக்கிஷமாக கருதப்படுகிறது யோகா. யோகாவால் எண்ணிலடங்கா உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது இப்போது பலருக்கும் தெரிந்துள்ளது.இந்தியா மட்டும் இல்லாமால் வெளிநாடுகளில் கூட தற்போது யோகா கலையை மிகவும் பரவலாக பயன்படுத்தி...
studies after 12th

என்ன படிக்கலாம்…எங்கு படிக்கலாம்?

0
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பிக்கும் முன், அவர்களை முழுவதும் ஆட்கொண்டுள்ளது உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள்.  மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்து வந்த நிலைமாறி,...
veetla vishesham movie

“வீட்ல விசேஷம் ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம்” – ஆர்.ஜே.பாலாஜி

0
குடும்பங்களையும் நண்பர்களையும் திரையரங்குகளில் ஒன்றிணைப்பதில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள...
yogi babu new movie

யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்

0
ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்” திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால்,...
dance master chinna

200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா மரணம்

0
முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, செந்தூர பாண்டி, நேசம் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா...