மத்திய ரிசர்வ் போலீஸ் படை CRPF வேலைவாய்ப்பு 2023!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை CRPF வேலைவாய்ப்பு 2023!
Published on

மத்திய ரிசர்வ் போலீஸ் படை CRPF வேலைவாய்ப்பு 2023. உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் பதவிகளுக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள் , கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

வேலை இடம்: விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலை மற்றும் தேர்வு இடத்தை தேர்வு செய்யலாம்.

காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

1. உதவி துணை ஆய்வாளர் (Assistant Sub Inspector ) - 143

2. ஹெட் கான்ஸ்டபிள் (Head Constable) - 1315.

சம்பளம்/ஊதியம் மற்றும் தர ஊதியம் :

  • உதவி சப்-இன்ஸ்பெக்டர் (Assistant Sub Inspector ) பதவிக்கு மாதம் ரூ. 29,200 - 92,300

  • தலைமை காவலர் (Head Constable) பதவிக்கு மாதம் ரூ.25,500 - 81,100

வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

உதவி சப்-இன்ஸ்பெக்டர் (Assistant Sub Inspector ) மற்றும் தலைமை காவலர் (Head Constable) பதவிக்கு 12வது தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • கணினி அடிப்படையிலான தேர்வு (computer based exam)

  • திறன் தேர்வு (skill test)

  • உடல்நிலைத் தேர்வு (physical standard test)

  • ஆவண சரிபார்ப்பு (document verification)

  • மருத்துவத் தேர்வு (medical exam) ஆகியவற்றின் செயல்திறன் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தயாராக இருக்க வேண்டும்.

பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை:

  • Hindi or English Language (25 Questions, 25 Marks)

  • General Aptitude (25 Questions, 25 Marks)

  • General Intelligence (25 Questions, 25 Marks)

  • Quantitative Aptitude (25 Questions, 25 Marks)

  1. கணினி அடிப்படையிலான அப்ஜெக்டிவ் வகை தேர்வுக்கான (computer-based objective type exam) மொத்த கேள்விகள் 100 ஆகவும் அதன் மொத்த மதிப்பெண்கள் 100 ஆகவும் இருக்கும்.

  2. தேர்வின் கால அளவு: 90 நிமிடங்கள் இருக்கும்.

  3. ஒரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் negative mark இருக்கும்.

  4. கணினி அடிப்படையிலான தேர்வு (22-28 பிப்ரவரி 2023) தேதிக்குள் நடத்தப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது: கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.

official website : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/81118/Index.html

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25-01-2023

பணி அனுபவம்: இந்தப் பதவிக்கு மேலும் பணி அனுபவம் தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது/ஈடபிள்யூஎஸ்/ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100

  • எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.0

  • உயர் பதவிக்கு விண்ணப்பிக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை CRPF இன் வழக்கமான ஊழியர்களும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com