சீனாவை மிரட்டும் கொரோனா: பல மாகாணங்களில் முழு லாக்டவுன்!

சீனாவை மிரட்டும் கொரோனா: பல மாகாணங்களில் முழு லாக்டவுன்!

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் அங்கு கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்திருப்பதால், அந்நாட்டின் பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள பைஸ் நகரில் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிய எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள  இந்நகரில் கடந்த 3 நாட்களில் மட்டும் 70க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முழ் ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து பைஸ் நகரத் துணை மேயர் கு ஜுன்யன் அறிவித்ததாவது;

பைஸ் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. டுவதாகவும் நகரத் துணை மேயர் கு ஜுன்யன் அறிவித்துள்ளார். குறிப்பாக சில பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் மற்றும் மியான்மாரில் இருந்து சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்கும் பணிகளில் சீனா நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்தார். சீனா தன் நாட்டு எல்லைகளில் வசிக்கும் மக்களிடம் கொரோனா பரிசோதனைகள் நடத்தி வருகிறது.

சீனாவின் ஜூரோ கோவிட் கொள்கை மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைச் சீனா அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்காக வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com