சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்..அதிர்ச்சி வீடியோ!

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்..அதிர்ச்சி வீடியோ!
  • சீனாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் இரும்பு பெட்டி வசிப்பிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உலகெங்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவில்  தற்போது ஓமைக்ரான் தொற்றூ அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து அதிகளவு மக்கள் வசிக்கும் நகரங்களில் தீவிரமான முழு ஊரடங்கை சீன அரசு அமல்படுத்தியிருக்கிறது. உணவு வாங்க கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என அந்நாட்டு மக்கள் வெய்போ சமூக ஊடகம் மூலமாக அபயக் குரல்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களை தனிமைப்படுத்துவதற்காக விளையாட்டு மைதானங்களில் விசேஷ இரும்பு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டிருந்தாலும் கூட அந்தப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகள், வயதானவர்கள், பெண்கள் போன்றோர் நூற்றுக்கணக்கான பேருந்துகளில் ஏற்றப்பட்டு இந்த தனிமை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்படுகின்றனர். இந்த முகாம்களில் சிறிய அளவுள்ள இரும்பு பெட்டிகளில், ஒரு கட்டிலும், ஒரு கழிவறையும் உள்ளன. இங்கு அவர்கள் 12 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப் பட்டுலள்லது. இந்த விடீயோ உலகெங்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

https://twitter.com/i/status/1480157037681995779

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com