சீனாவில் முழு ஊரடங்கு: தறிகெட்டு அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ்!

சீனாவில் முழு ஊரடங்கு: தறிகெட்டு அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ்!

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள Xi'an மாகாணத்தில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு, அனைத்து  அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளது.

இதுகுறித்து சீன அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

சீனாவில்  Xi'an மாகாணத்தில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் என்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மக்கள் முக்கியமான காரணத்திற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்,.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் காரணமாக Xi'an பகுதியிலும், பெரு நகரங்களில் இருந்து Xi'an பகுதிக்குமான போக்குவரத்து அனைத்தையும் சீன அரசு தடை செய்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் இப்பகுதியில் இருக்கும் 1.3 கோடி மக்கள் வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் இப்பகுதியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகள், வர்த்தக அமைப்புகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் சீனாவில் வருகிற பிப்ரவரி 4-ம் தேதி பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளது, இதற்கான பணிகள் வேகமெடுக்கத் துவங்க உள்ள நிலையில், Xi'an பகுதியில் ஏற்பட்டு உள்ள கொரோனா தொற்று இப்போட்டியைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com