‘திருச்சிற்றம்பலம் படம்: தனுஷ் –நித்யா மேனன் நடன வைரல் வீடியோ!

‘திருச்சிற்றம்பலம் படம்: தனுஷ் –நித்யா மேனன் நடன வைரல் வீடியோ!

'திருச்சிற்றம்பலம்' படத்தில் இருந்து தனுஷ் – நித்யா மேனன் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் தனுஷ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அனிருத் இசையமைக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் – அனிருத் இணைவதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பினிடையே 'மின்சாரக் கனவு' படத்தில் இடம்பெற்ற 'வெண்ணிலவே' பாடலுக்கு தனுஷ் மற்றும் நித்யா மேனன் இணைந்து டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியா அல்லது இடைவேளையின்போது சும்மா இருவரும் டான்ஸ் ஆடியதா என்பது குறித்த தகவல்கள் வெளீயாகவில்லை.

.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com