சோசியல் மீடியாவில் இருந்து கோலிவுட்டில் ஹீரோவாக நுழையும் பிரபல யூ-ட்யூபர்!

சோசியல் மீடியாவில் இருந்து கோலிவுட்டில் ஹீரோவாக நுழையும் பிரபல யூ-ட்யூபர்!

சோசியல் மீடியா. இதன் அர்த்தம் சிறு குழந்தைக்குக்கூட தெரியும் என்று கூறுமளவுக்கு, ஓவர் நைட்டில் ஒரு நபரை உச்சத்திற்கே கொண்டுசெல்லும் அளவுக்கு சக்திவாய்ந்ததுதான் இந்த சோசியல் மீடியா.

இதில் ஃபேஸ்புக், டிக்டாக், யு-ட்யூப், ட்விட்டர், இன்ஸ்டா என பல சோசியல் மீடியா ப்ளாட்பார்ம்களின் மூலமாக தனது கருத்துக்களை பதிவிடுவது மூலமாகவோ, தனது பேச்சுத்திறமை, நடிப்புத்திறமை இப்படி ஒருவருடைய தனிப்பட்ட திறமைகள் சோசியல்மீடியாவில் வெளிப்படுவதன் மூலம் பிரபலமானவர்கள் பலரும் உண்டு.

அந்தவகையில், பிரபலமானவர்தான் யூ-ட்யூபரான மைக்செட் ஸ்ரீராம். இவர் யூ-ட்யூப் சேனலில் பலவிதமான நகைச்சுவை கலந்த வீடியோக்களை வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். இவரது வீடியோக்கள் ஒவ்வொன்றும் மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாக கால்பதிக்கவிருக்கிறார். ஜிவி பிரகாஷின் '13' படத்தை இயக்கிய விவேக்தான் இப்படத்தை இயக்குகிறார். தற்போது இந்தப் படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் பூஜை போடப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த மைக்செட் ராம், தன்னை ஃபாலோ செய்யும் தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com