சீரியலிருந்து திடீரென விலகினார்! அடுக்கடுக்கான சர்ச்சை!

திவ்யாஸ்ரீ , அர்னவ்
திவ்யாஸ்ரீ , அர்னவ்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

சன் டிவியில் ஒளிபரப்பாகிய கேளடி கண்மணி மூலம் அறிமுகமானவர்கள் திவ்யாஸ்ரீ மற்றும் அர்னவ். இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் பல தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதாகவும் திவ்யா தெரிவித்திருந்தார். அதன்பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு மாறி மாறி புகார்களை கூறி வந்தனர்.

இது குறித்து அர்னவ் மீது வழக்குப்பதியப்பட்டது. ஆனால் இதை முற்றிலும் மறுத்ததோடு திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தார் அர்னவ்.

திவ்யாஸ்ரீ - அர்னவ்
திவ்யாஸ்ரீ - அர்னவ்

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிரடியாக போலீஸார் கைது செய்தனர். இவர் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வரும் நிலையில் திடீரென அதில் இருந்துவிலகி உள்ளார் என தெரிய வந்துள்ளது. இது சின்னதிரை உலகில் பரபரப்பை கிளறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com