பிக்பாஸிலிருந்து வெளியேறிய அசல் கோலாறு! பங்கமாய் கலாய்த்த நெட்டிசன்கள்!

 ரச்சிதா  - அசல் கோலாறு - விஜே மகேஷ்வரி
ரச்சிதா - அசல் கோலாறு - விஜே மகேஷ்வரி

பிக்பாஸ் சீசன் 6 தற்போது மூன்று வாரங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதில், விஜே மகேஷ்வரி, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், அசீம், ஆயிஷா, ரச்சிதா மகாலட்சுமி, குயின்ஸி, ராம், கதிரவன் உள்ளிட்டோருடன் பாடகர் அசல் கோலாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.

முதல் வாரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இவர், பின்னர் படிப்படியாக விளையாட தொடங்கினார். இவர் ஜாலியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தடவல் மன்னன் என பெயர் எடுத்தார். அசல் கோலாரின் நடவடிக்கைகளால் வெறுத்து போன நெட்டிசன்ஸ் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6

அசல் கோலார் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் மீண்டும் தனலட்சுமி பற்றி பொய்யான கருத்தை கூறியதால் அசிம் வெளியேற வேண்டும் என்றும் கூறி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் வாக்குகளின் அடிப்படையில் அசல் கோலார் வெளியேற்றப்பட்டார்.

அசல் கோலாரின் வரம்பு மீறிய செயலை கண்டித்து அவர் எலிமினேஷனுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். நெட்டிசன்கள் எதிர்பார்த்தது போலவே எலிமினேஷனில் வந்ததால், அசல் கோலாறுக்கு யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. மற்ற போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், டேஞ்சர் ஜோனில் இடம்பெற்றுள்ள மூவரில் ஒருவராக அமர்ந்திருந்தார் அசல்.

ஜனனி  - அசல் கோலாறு
ஜனனி - அசல் கோலாறு

பின்னர் மகேஸ்வரி, அசீம் காப்பாற்றப்பட்ட நிலையில் அசல் எலிமினேஷன் ஆனார். இதையடுத்து, நீங்க வந்த நோக்கம் நிறைவேறிடுச்சா என கமல் கேட்க, இல்லை சார் இன்னும் பேலன்ஸ் இருக்கு, உள்ளே இருந்து இருந்தால் இன்னும் பண்ணி இருப்பேன், இருந்தாலும் ஹாப்பி தான் சார், இதுவரைக்கும் பண்ணதே ஹாப்பிதான் என்றார்.

நீங்க வந்த நோக்கம் நிறைவேறிடுச்சுங்களா? என கமல் கேட்டதை வைத்து அசலை பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com