டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டை போடும் அசீம், தனலஷ்மி! பிக்பாஸ்சின்  டாப் கண்டன்ட் கிரியேட்டர்ஸ்!

டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டை போடும் அசீம், தனலஷ்மி! பிக்பாஸ்சின் டாப் கண்டன்ட் கிரியேட்டர்ஸ்!

பிக்பாஸ் அட்ராசிட்டிகள்!

‘நான் இந்த டீம்ல இருக்க மாட்டேன்’ என்று கத்திக்கொண்டே இருந்தார் அசிம். வாராவாரம் கமல்ஹாசன் அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தாலும் அசீம் அட்ராசிட்டிகள் மட்டும் எப்போதும் தொடரும். கமலின் எச்சரிக்கைக்குப் பிறகு சற்று பம்மியிருக்கும் அசிமின் அட்ராசிட்டிகள் மறுபடியும் களை கட்ட தொடங்கிவிட்டது.

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6

இதனால் தனலஷ்மிக்கும், அசிமிற்கும் இடையே வழக்கம் போல் முட்டலும், மோதலும் ஆரம்பித்து அதன் சூடு எறிக்கொண்டே போனது. ‘உன்னை விடவும் எனக்கு சூப்பரா கோபம் வரும்’ என்று அசிம் சொல்ல “அது எனக்கு நல்லாத் தெரியுமே என குத்திக்காட்டிய தனலக்ஷ்மி , ஆமாம் ,பதிலுக்கு பதில் வாய் பேசினா என்ன பண்ணுவீங்க?” என்று தனலஷ்மியும் விடாமல் மல்லு கட்டினார். உனக்கு ஒன்னும் தெரியாது என அசீம் தொடர்ந்து வம்புக்கு இழுக்க உஷரான தனலட்சுமி சட்டென எழுந்து வெளி சென்று மழையில் உல்லாசமாக ஆட தொடங்கினார்.

தனலஷ்மி ஆத்திரத்துடன் எழுந்து செல்ல மறுபடியும் கடுப்பான அசீம் , “ஏன் அவளுக்குப் பயப்படறீங்க?” என்று மற்றவர்களிடம் சண்டையிட தொடங்கினார் . பிறகு கோபத்துடன் ‘மானம் மரியாதை இழந்து பிக்பாஸ்ல என்னால் இருக்க முடியாது. இனிமே நான் இந்த டீம்ல இருக்க மாட்டேன்’ என தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார். அதன் பிறகு உள்ளே வந்த தனலஷ்மியிடம் அசீம் மறுபடியும் சண்டையை துவக்க கடுப்பான தனலஷ்மி அழத்தொடங்கினார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

இது குறித்து பஞ்சாயத்தை தொடங்கிய ஹவுஸ்மேட்கள் "இதென்னடா பெரிய தலைவலி" என புலம்ப தொடங்கினர். வேகமாக வந்த மகேஸ்வரி ப்பா யாராவது ஒருத்தர் விட்டு கொடுங்களேன் இப்படி மல்லு கட்டினா எப்படி? என சொல்லி சென்றார்.

தனலஷ்மி மற்றும் அசீம் இருவரும் ஒரு முடிவுடன் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதாக தெரிகிறது. இருவரம் தினமும் பிக்பாஸ் வீட்டிற்கு ஏகப்பட்ட கண்டென்ட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை .

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com