கோபியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் ஈஸ்வரி.. பரபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்!

பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்
Updated on

பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதை மையப்படுத்தி பாக்கியலட்சுமி சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் கதாநாயகியாக சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். தனது அசாத்திய நடிப்பால் பெண்களுக்கு ஒரு உந்துதலை அளித்து வருகிறார்.

கோபி வேறு ஒரு திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. மகன் மீது உள்ள பிரியத்தால் அவரை வீட்டிற்கு அழைத்து வருவேன் என சவால் விட்டு சென்ற ஈஸ்வரி இன்றைய எபிசோட்டில் அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

ஏற்கனவே ஒரு முறை இப்படி கோபியை அழைத்து வந்த போது உடன் ராதிகாவும் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்தனர். ஒரு வழியாக போராடி வீட்டை கோபியிடம் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அவர்களை வீட்டை விட்டு துரத்தினார். தற்போது மீண்டும் ஈஸ்வரி கோபியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் பாக்கியலட்சுமி முன்பு சொன்னது போல் வீட்டை விட்டு வெளியேறுவாரா அல்லது கோபியை வெளியேற்றுவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க அமிர்தாவை அழைத்து செல்வேன் என கங்கனம் கட்டி கொண்டு கணேஷ் சென்னையில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.

எப்படியோ ஒரு வழியாக மகனை கண்டுபிடித்து அவருடனே வீட்டில் தங்கியுள்ளனர் கணேஷ் பெற்றோர். அமிர்தாவுக்கு எப்போது உண்மை தெரிய வருமோ என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கும் நிலையில், பெற்றோர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக கணேஷ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com