குழந்தை இருப்பதை அறிந்த கணேஷ்.. மொத்த உண்மையும் தெரியவருமா? சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!

பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்விஜி

பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதை மையப்படுத்தி பாக்கியலட்சுமி சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் கதாநாயகியாக சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். தனது அசாத்திய நடிப்பால் பெண்களுக்கு ஒரு உந்துதலை அளித்து வருகிறார்.

இந்த கதை கொஞ்சம் மங்கி கொண்டிருந்த நிலையில் திடீரென சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காரணம் அமிர்தாவின் கணவர் சாகாமல் திரும்ப வந்தது தான். கணவர் கணேஷ் உயிரிழந்ததாக நினைத்த அமிர்தா எழிலை காதலித்து அவருடன் திருமணம் செய்து கொண்டார். இதற்கு கணேஷின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். கணேஷின் குழந்தையுடன் அமிர்தா எழில் வீட்டில் வசித்து வரும் நிலையில், திடீரென கணேஷ் சாகவில்லை என திரும்பி வந்துள்ளார்.

இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாவம் இனி அமிர்தா என்ன செய்யபோகிறார் என யோசித்து வருகின்றனர். வீடு திரும்பிய கணேஷ், தினமும் அமிர்தாவை பற்றி தாய் தந்தையிடம் நச்சரித்து வருகிறார். அவர்களும் அமிர்தா திருமணம் குறித்து சொல்லமுடியாமல் வேறு காரணம் கூறி மலுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக தந்தையின் போனை பார்த்த கணேஷ், நிலாவை பார்த்து யாரென்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் உன்னுடைய குழந்தை தான் என உளறிவிட்டனர். இதனை கேட்ட கணேஷ் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். எனக்கு ஒரு மகள் இருக்கிறது என்று. இந்த ப்ரோமோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com