பெண்களை கவர்ந்த ‘பாக்யலட்சுமி’ !

பெண்களை கவர்ந்த ‘பாக்யலட்சுமி’ !

விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் பரபரப்பான கட்டத்துடன் சிறப்பான எபிசோட்களுடன் தற்போது களைகட்டி வருகிறது.

பெங்காலி தொடரான ஸ்ரீமோயி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் இந்த பாக்கியலட்சுமி இந்த தொடர் தற்போது பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் காணப்படுகிறது என சொல்கிறார்கள் சீரியல் பிரியர்கள். விஜய்டிவியில் இந்த தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் சிறப்பான கதைக்களத்தால் ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது. இந்தத் தொடரில் பாக்கியா, கோபி, ராதிகா என லீட் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையை கதைக்களமாக கொண்டு எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் கணவரை பிரிந்து தனித்து வாழும் பெண்களுக்கு உத்வேகம்அளிக்கும் வகையில் காணப்படுகிறது. தற்போது கோபியை விவாகரத்து செய்தபாக்கியா, ஒரே நேரத்தில் தனது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் சிறப்பாகசெய்து வருகிறார்.

அதே நேரத்தில் திருமணமான மகனை வைத்துக் கொண்டு ராதிகாவை காதலித்து திருமணமும் செய்துக் கொண்ட கோபி, ஒவ்வொரு விஷயத்திற்கும் போராடும் நிலை காணப்படுகிறது. பாக்கியாவுடன் இருக்கும் போது ராஜ வாழ்க்கைவாழ்க்கை வாழ்ந்த கோபி தற்போது, சாப்பாடு முதல்கொண்டு ஒவ்வொன்றிற்கும் போராட வேண்டியுள்ளது. இதனால் பல நேரங்களில் அவர் நொந்து போகும் நிலையும் உள்ளது. இது மனைவியை ஏமாற்றும் நபர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது.

இந்த சீரியலில் பல சுவாரஸ்யங்களையும் காண முடிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் மகா சங்கமத்தில் பாக்கியலட்சுமி தொடர் இணைத்து ஒளிபரப்பப்பட்டது.. தற்போது இந்த சீரியல் பல்வேறு தரப்பினரிடையே வரவேற்ப்பை பெற்று பரபரப்பாக வலம் வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com