பிக் பாஸ் சீசன் 7: போட்டியாளர்கள் மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்கள்!

பிக் பாஸ் சீசன் 7: போட்டியாளர்கள் மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்கள்!

பிக் பாஸ் 7 வரப்போகிறது என்பதற்கான முதல் அதிகாரப்பூர்வ விளம்பரம் ஆகஸ்ட் 18, 2023 அன்று Disney+ Hotstar ஆல் வெளியிடப்பட்டது. ப்ரோமோவில், வரவிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் அவரது தோற்றத்தை நினைவூட்டும் ஒரு தனித்துவமான அவதாரத்தில் ஹாசன் காணப்படுகிறார். அவர் கடற்கரையில் நின்று, கடலை எதிர்கொண்டு, தனது கைக்கடிகாரத்தை சரிபார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னர் அவர் முகத்தில் ஒரு கிண்டலான புன்னகையுடன் பார்வையாளர்களை நோக்கி திரும்பி, தான் கவனிக்கத் தயாராகி வருவதாக சமிக்ஞை செய்கிறார். இந்த ப்ரோமோ புதிய சீசன் தொடங்கும் என ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நிகழ்ச்சியிலிருந்து ஹாசன் வெளியேறுவது தொடர்பான அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் லோகோவும்  ஒரு புதிய வடிவம் பெற்றுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள் பட்டியலில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், ஸ்டார் விஜய் சேனலின் பல பிரபலமான முகங்கள் கமல்ஹாசனின் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று விவரம் தெரிந்த வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. பிக்பாஸ் தமிழ் 6 போட்டியாளர் ரசிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் கோபாலசாமி நிகழ்ச்சியின் புதிய சீசனில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த நடிகர்களான ரேகா நாயர் மற்றும் பப்லு பிருதிவீராஜ் மற்றும் பிரபல தமிழ் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் ஆகியோரும் பிக் பாஸ் தமிழ் 7 இன் போட்டியாளர்களின் பட்டியலில் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. நடிகை சோனியா அகர்வாலும் இந்த சீசனில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர் நடிகை ஓவியா மற்றும் நடன இயக்குனர் சாண்டி ஆகியோர் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சாண்டி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நன்கு அறியப்பட்ட நடன இயக்குனர் ஆவார். அவர் பிக்பாஸ் 3ல் பங்கேற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒரு நடன இயக்குனர்  தோன்றியுள்ளார். கடந்த சீசனில், ராபர்ட் மாஸ்டர் பங்கேற்றார். இந்த பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில் சாண்டி இந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அதுபோல முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஓவியா இந்த வருடம் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியின் முன்னணி VJ மா கா பா ஆனந்த் இதில் வருவார் என தகல்வல்கள் கசிந்துள்ளன. மா கா பாவின் நகைச்சுவை நையாண்டி இந்த சீசனை மேலும் சுவாரஸ்யம் ஆக்கும் என நம்பலாம். குக் வித் கோமாளி புகழ் ரவீனா தாஹா தனது பப்ளி பெர்சோனாலிட்டியுடன் இதில் கலந்து கொள்வார் என்று சிலர் சொல்கிறார்கள்.

இதில் கலந்து கொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மற்ற பெயர்கள்: செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை ஷகீலாவின் மகள் மிலா, மற்றும் நடிகை தர்ஷா குப்தா.

பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் ப்ரோமோ வீடியோவில் ஒரு திருப்பத்தை சேர்த்துள்ளனர். இந்த வீடியோவில், தொகுப்பாளர் கமல்ஹாசன் "ஒரு வீட்டில் 60 கேமராக்களுக்கு மத்தியில் 15 போட்டியாளர்கள்... இல்லை இல்லை... இரண்டு வீடுகள்" என்று கூறி ஆடம்பரமான வில்லாவில் இருந்து வெளியேறுகிறார்! இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்குமா. இரண்டாவது வீட்டின் பங்கு என்னவாக இருக்கும்? அது தண்டனை இடமாகவோ அல்லது தனிமைப்படுத்தும் வில்லாவாகவோ பயன்படுத்தப்படுமா? அதை பற்றி மக்கள் இப்பொழுது பல விதமான யூகங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட முகத்துடனும் சால்ட் & பெப்பர் லுக்குடனும் கமல்ஹாசன் ப்ரோமோ வீடியோவில் சூப்பர் ஸ்டைலாக இருக்கிறார். முந்தைய சீசன்களைப் போலவே, இந்த சீசனும் ஒரு சலசலப்பை உருவாக்கி, ரசிகர்களை ஆவலுடன்  காத்திருக்க வைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com